Watch Video: கே.கே.ஆர் வீரர்களுடன் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய அனன்யா பாண்டே.. கலக்கிய வருண் சக்கரவர்த்தி..!
Ananya Pandey: அனன்யா பாண்டேவும், ஆல்ரவுண்டர் ரசல் மற்றும் மற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களும் ஹிந்தி பாடல்களுக்கு அட்டகாசமாக நடனமாடுகிறார்கள்.
Ananya Pandey Viral Video: கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2024வது சீசனானது மே 26ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில், கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை பெரியளவில் கொண்டாடும் விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள், துணை நிலை ஊழியர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஆச்சரியப்படும் விதமாக இந்த வீடியோவில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இருப்பது கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நெட்டிசன்கள் தொடர்ந்து கமெண்ட் பக்கத்தில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Choco Bars 😘💋#AnanyaPandey #SuhanaKhan pic.twitter.com/FfF5NVF40T
— Actress__Glitz_India (@glitz_actress) May 28, 2024
அனன்யா பாண்டேவுடன் நடனமாடும் ரசல்:
Celebrations are in full swing at the IPL winning party as Andre Russell couldn't resist grooving to his favourite "Lutt Putt Gaya" song, alongside Chandrakant Pandit and Ananya Pandey. 🔥💜 What a k'Night ❤️@iamsrk @Russell12A @KKRiders @KKRUniverse #ShahRukhKhan… pic.twitter.com/0OVfUdtAJM
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 27, 2024
இந்த வீடியோவில் அனன்யா பாண்டேவும், ஆல்ரவுண்டர் ரசல் மற்றும் மற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களும் ஹிந்தி பாடல்களுக்கு அட்டகாசமாக நடனமாடுகிறார்கள். மேலும், பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்த்தும் சிறப்பாக நடனமாடினார். இந்தநிலையில் அனன்யா பாண்டேவின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக ட்விட்டர் பக்கத்தில் நம்பர் 1 இடத்தில் ட்ரெண்டாகி வருகிரார் அனன்யா பாண்டே.
லேஸி பாய்ஸ் பாடலுக்கு சிறப்பாக ஆடிய வருண், அபிஷேக்:
பிரபல ஹிந்தி பாடலான லேஸி பாய்ஸ் பாடலுக்கு மேடை மேல் ஏறி பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் நமன் தீப் சிங்கும் நடனமாடிய வீடியோவும் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
KKR team partying last night after the IPL victory. Abhishek Nayar, Varun Chakravarthy and Ramandeep dancing 🔥 pic.twitter.com/liFudzy6vi
— Syed Irfan Ahmad (@Iam_SyedIrfan) May 27, 2024
3வது முறையாக கோப்பையை வென்ற கொல்கத்தா:
கடந்த மே 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பதிலுக்கு பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.