RCB New Captain: காயத்தில் படிதார்.. ஆர்சிபி-யின் புதிய கேப்டனாக உருவெடுத்தார் ஜிதேஷ் சர்மா!
IPL 2025 RCB vs SRH: ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணிக்காக ஜிதேஷ் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லக்னோவில் இன்று நடக்கும் போட்டியில் ஆர்சிபி - ஐதரபாத் அணிகள் மோதி வருகின்றனர்.
இந்திய - பாகிஸ்தான் மோதலுக்கு முன்பாக ஆர்சிபி அணி கடைசியாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானன போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஆர்சிபி-யின் புதிய கேப்டன் ஜிதேஷ் சர்மா:
இந்த நிலையில், கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டி மழையால் ரத்தான நிலையில் இன்று ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜிதேஷ் சர்மா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
ரஜத் படிதார் கேப்டனாக இல்லாத சூழலில் கோலி அல்லது குருணல் பாண்ட்யா கேப்டன்சியை மீண்டும் கையில் எடுப்பார் என்று சில ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இளம் வீரர் ஜிதேஷ் சர்மாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இம்பேக்ட் வீரர்:
ஜிதேஷ் சர்மா இதுவரை ஒரே ஒரு முறை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக கேப்டன்சி செய்துள்ளார். ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குகிறார். ரஜத் படிதார் காயம் காரணமாக கேப்டன்சியை எடுக்காவிட்டாலும் இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளார் என்று ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், டுப்ளிசிஸ், ரஜத் படிதார் ஆகியோருக்கு பிறகு ஆர்சிபி அணியின் கேப்டனாக ஜிதேஷ் சர்மா பொறுப்பேற்றுள்ளார். 31 வயதான ஜிதேஷ் சர்மா நடப்பு தொடரில் ஆர்சிபி அணியின் தவிர்க்க முடியாத வீரராக உலா வருகிறார்.
ப்ளேயிங் லெவன்:
ஜிதேஷ் சர்மா தலைமையிலான இன்றைய போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியில் பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ஷெப்பர்ட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர், யஷ் தயாள், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.




















