மும்பையில் இருந்து வெளியேறும் பாண்டியா அன் கோ.... சூர்யாகுமாருக்கு டாட்டா!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் வெளியேற போவதாக தகவல் கிடைத்துள்ளது.
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்கள் போல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமை வெளியே கொண்டு வர ஒரு பாலமாக அமையும் என்று கருதப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்ட ஐபிஎல் இப்போது முழு பிஸினசாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கத்தை விட வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக நடக்கவுள்ளது ஐபிஎல். வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் பிரம்மிக்க வைத்துள்ளன. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர்.
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் புதிதாக வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது இருக்கும் 8 ஐபிஎல் அணிகளுக்கும் 4 வீரர்கள் வரை தக்கவைத்து கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் புதிதாக வந்துள்ள இரண்டு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தற்போது உள்ள 8 அணிகளும் தங்களுடைய அணியில் தக்கவைத்து கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வரும் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இதனால் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுடைய வீரர்கள் தக்கவைத்து கொள்ளும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
இந்தநிலையில், மும்பை அணி யார் யாரை தக்கவைக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தக்க வைக்க போகிறார்கள். அவருக்கு வருகிற ஐபிஎல் தொடரில் சம்பளம் 16 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நட்சத்திர பௌலர் பும்ராவையும் 12 கோடி கொடுத்து தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரையும் மும்பை அணி தக்க வைக்கும் எனவும், சூர்யாகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா ஆகியோர் நல்ல பார்மில் இல்லாத காரணத்தினால் கழட்டிவிட போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும் தெரிகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்