IPL Auction 2023: மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை பேரை ஏலத்தில் எடுக்க முடியும்..? முழு விவரம் உள்ளே..!
IPL Mini Auction 2023: ஐ.பி.எல். மினி ஏலத்தில் ஐதரபாத் அணி அதிகபட்சமாக 43.25 கோடி வரை கையிருப்பில் வைத்துள்ளது.
கொச்சியில் இன்று ஐ.பி.எல். மினி ஏலம் நடைபெற உள்ளது. மொத்தம் 87 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 415 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சாம்கரன் ஆகியோர் பங்கேற்பதால் இந்த ஏலம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்? எத்தனை கோடி ஏலத்தில் செலவு செய்ய முடியும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
- சென்னை சூப்பர் கிங்ஸ்:
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 7 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 2 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூபாய் 20.45 கோடி கையிருப்பில் உள்ளது.
- டெல்லி கேபிடல்ஸ்:
ஐ.பி.எல். தொடரில் எப்போதும் மற்ற அணிகளுக்கு சவால்விடும் அணியான டெல்லி அணி 5 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும். அதில் 2 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம். அவர்களிடம் கையிருப்பில் ரூபாய் 19.45 கோடி உள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ்:
கடந்த தொடரில் அறிமுகமாகி அறிமுக தொடரிலே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் 7 பேரை ஏலத்தில் எடுக்க முடியும். ரூபாய் 19.25 கோடியை கையிருப்பில் வைத்துள்ள அவர்களது அணியில் 3 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கையிருப்பில் ரூபாய் 7.25 கோடி உள்ளது. ஆனாலும், அவர்களால் 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அதில் 3 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கடந்த தொடரில் அறிமுகமாகி அனுபவ அணிகளையே மிரட்டிய லக்னோ அணியிடம் கையிருப்பில் ரூபாய் 23.35 கோடி உள்ளது. அவர்களால் 10 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 4 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- மும்பை இந்தியன்ஸ்:
ஐ.பி.எல். தொடரின் பலமிகுந்த அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூபாய் 20.55 கோடி கையிருப்பில் உள்ளது. மறுகட்டமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள மும்பை அணியால் 9 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 3 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- பஞ்சாப் கிங்ஸ்:
ஐ.பி.எல். தொடரில் அனுபவ அணியாக இருந்தாலும் கோப்பையை கைப்பற்ற போராடும் பஞ்சாப் அணி கைவசம் ரூபாய் 32.2 கோடி உள்ளது. ஷிகர்தவான் தலைமையிலான பஞ்சாப் அணியில் 9 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 3 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஐ.பி.எல். கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய ராஜஸ்தான் அணியன் கைவசம் ரூபாய் 13.2 கோடி உள்ளது. அவர்களால் 9 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 4 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
கோப்பையை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் போராடும் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஆர்.சி.பி. அணியின் கைவசம் ரூபாய் 8.75 கோடி உள்ளது. அவர்களால் 7 பேர் வரை ஏலத்தில் எடுக்க முடியும். அவர்களில் 2 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம்.
- ஐதரபாத் சன்ரைசர்ஸ்:
புவனேஷ்வர்குமார் தலைமையில் களமிறங்கியுள்ள ஐதராபாத் அணிக்கு இந்த மினி ஏலம் மிகுந்த சாதகமாக அமைய உள்ளது. அவர்களிடம் ரூபாய் 43.25 கோடி வரை கையிருப்பு உள்ளது. அவர்களால் 13 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். இவர்களுக்குதான் இந்த மிகப்பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது. அவர்களில் 4 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம். சாம் கரண், பென்ஸ்டோக்சை கைப்பற்ற இவர்கள் போராடுவார்கள என கருதலாம்.