மேலும் அறிய

IPL Auction Dates: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - 1,574 வீரர்கள், எங்கு? எப்போது?

IPL Auction Dates: ஐபிஎல் 2025  சீசனை முன்னிட்டு வீரர்களுக்கான, மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

IPL Auction Dates: ஐபிஎல் 2025  சீசனை முன்னிட்டு வீரர்களுக்கான, மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் தேதி அறிவிப்பு

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் இந்த ஏலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க சர்வதேச அளவில் இருந்து மொத்தம்  ஆயிரத்து 574 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில், ஆயிரத்து 165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மேலும், முன்பதிவு செய்தவர்களில் 320 பேர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர்கள் ஆவர். மீதமுள்ள ஆயிரத்து 224 பேர் அன் - கேப்ட் வீரர்கள் ஆவர். 30 வீரர்கள் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்களாவர். இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டுமே 10 அணிகள் சார்பில் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் விவரம்:

நாடு

வீரர்கள் பதிவு

ஆப்கானிஸ்தான்

29

ஆஸ்திரேலியா

76

வங்கதேசம்

13

கனடா

4

இங்கிலாந்து

52

அயர்லாந்து

9

இத்தாலி

1

நெதர்லாந்து

12

நியூசிலாந்து

39

ஸ்காட்லாந்து

2

தென்னாப்பிரிக்கா

91

இலங்கை

29

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

1

அமெரிக்கா

10

வெஸ்ட் இண்டீஸ்

33

ஜிம்பாப்வே

8

அணிகளிடம் உள்ள ஏலத்திற்கான மீதத் தொகை: 

ஒவ்வொரு அணி நிர்வாகமும்  அதிகபட்சமாக 25 வீரர்களை தங்கள் வசம் வைத்திருக்கலாம். அதேநேரம், ஏலத்திற்கு முன்பே தக்கவைப்பு விதிகளை பயன்படுத்தி குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 6 வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன. அவர்களுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள தொகையுடன் தான் அணி நிர்வாகங்கள் ஏல களத்தில் இறங்கவுள்ளன. எனவே, ஒவ்வொரு அணியின் கைவசமும் உள்ள மீதத் தொகை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • மும்பை இந்தியன்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ. 55 கோடி ரூபாய் (120 கோடியில்)
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை 69 கோடி ரூபாய் (120 கோடியில்)

  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் கைவசம் உள்ள மீதத்தொகை 45 கோடி ரூபாய் (120 கோடியில்)

  • பஞ்சாப் கிங்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை: 110.5 கோடி ரூபாய் ( 120 கோடியில்)

  • ராஜஸ்தான் ராயல்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை: 41 கோடி ரூபாய் (120 கோடியில்)

  • சென்னை சூப்பர் கிங்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ.65 கோடி (120 கோடியில்)

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ. 83 கோடி (120 கோடியில்)

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைவசம் உள்ள மீதத்தொகை ரூ.51 கோடி ரூபாய் (120 கோடியில்)

  • டெல்லி கேபிடல்ஸ் வசம் மீதமுள்ள தொகை ரூ. 73 கோடி (120 கோடியில்)

  •  குஜராத் டைட்டன்ஸ் கைவசம் மீதமுள்ள தொகை: ரூ. 69 கோடி (120 கோடியில்)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget