IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள் குறிவைக்கும் டாப் 10 வீரர்கள், ரிஷப் பண்ட் சரித்திரம் படைப்பாரா?
IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறிவைக்கும் வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்
ஐபிஎல் 2025 சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகபட்சமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஏலத்தொகை அதிகரிப்பு:
நட்சத்திர வீரர்களின் பெயர்கள் அடங்கிய 2 தொகுப்புடன் ஏலம் தொடங்கும். அதன் பிறகு பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் போன்ற பிரிவு வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள். இறுதியாக அன் - கேப்ட் பிளேயர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதில் முதல் ரூ.1 கோடி வரை வீரரின் விலை ரூ.5 லட்சம் படிப்படியாக உயர்த்தப்படும். ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஒரு வீரரின் விலை ரூ.10 லட்சம் படிப்படியாக உயர்த்தப்படும். ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வீரரின் விலை ரூ.20 லட்சம் படிப்படியாக உயர்த்தப்படும். ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 10 வீரர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
டாப் 10 வீரர்கள்:
- ரிஷப் பண்ட்
- கே.எல். ராகுல்
- ஷ்ரேயாஸ் ஐயர்
- அர்ஷ்தீப் சிங்
- ஜோஸ் பட்லர்
- யுஸ்வேந்திர சாஹல்
- கிளென் மேக்ஸ்வெல்
- மிட்செல் ஸ்டார்க்
- டேவிட் மில்லர்
- ட்ரெண்ட் போல்ட்
ரிஷப் பண்ட்:
கடந்த சில சீசன்களாக டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆட்டத்தின் போக்கை தனிநபராக தனது பேட்டிங்கால் மாற்றக்கூடிய வல்லமை கொண்ட ரிஷப் பண்ட்டை தங்கள் அணிக்காக வாங்க, ஒவ்வொரு அணியும் ஆர்வம் காட்டுகிறது. குறைந்தபட்சம் 20 கோடி தொடங்கி அதிகபட்சமாக, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர், பஞ்சாப், லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள், கேப்டன் பதவிக்காக பண்ட்-ஐ குறிவைக்கின்றன.
ஒவ்வொரு அணியும் குறிவைக்கக் கூடிய வீரர்கள்:
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஷ்வேந்திர சாஹல்.6 வீரர்களை தக்கவைத்துள்ளதால் ரைட் டு மேட்ச் கார்ட் ஆப்ஷன் இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவொன் கான்வே/ரச்சின் ரவீந்திரா, கிளென் மேக்ஸ்வெல், ரிஷப் பண்ட்/ லிவிங்ஸ்டோன், சிராஜ், போல்ட், ஆர்ச்சர், ஆவேஷ் கான், சாஹல், அஷ்வின், தீக்ஷனா
மும்பை இந்தியன்ஸ்: அன்சுல் கம்போஜ், ஆகாஷ் மத்வால், இஷான் கிஷான், சாஹல், அஷ்வின், நூர் அஹ்மது, வனிந்து ஹசரங்கா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: கே.எல். ராகுல், லியம் லிவிங்ஸ்டோன், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், சிராஜ்
கொல்கட்தா நைட் ரைடர்ஸ்: பட்லர், லெவிஸ், டி காக், மெக்கார்க், பில் சால்ட், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: வாஷிங்டன் சுந்தர், க்ளென் பிலிப்ஸ். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படலாம்.
டெல்லி கேபிடல்ஸ்: லிவிங்ஸ்டோன், மேக்ஸ்வெல், கலீல் அகமது, முகேஷ் குமார் ஆன்ரிச் நோர்ட்ஜே
பஞ்சாப் கிங்ஸ்: அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, அசுதோஷ் சர்மா, பட்லர், சால்ட், பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர்
குஜராத் டைட்டன்ஸ்: இஷான் கிஷன், டேவிட் மில்லர், முகமது ஷமி, சாஹல், அஷ்வின்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணால் பாண்ட்யா மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை குறிவைக்கலாம்.
ஏலத்தை நேரடியாக எங்கு காணலாம்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் ஜியோசினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை தொடரலாம். ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.