KKR vs SRH Playing XI: கொல்கத்தா - ஹைதரபாத் மோதல்...! ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகும் ப்ளேயிங் லெவன் இதுதான்..!
கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் கொல்கத்தா முதலில் பந்துவீசுகிறது.
கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
களத்தில் இறங்க உள்ள வீரர்களின் விவரத்தை கீழே முழுமையாக காணலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி:
மயங்க் அகர்வால், கிளாசென், ராகுல் திரிபாதி, ஹாரி ப்ரூக், கேப்டன் மார்க்ரம், ஷர்மா, புவனேஷ்குமார், மார்கண்டே, ஜான்சென், நடராஜனஜ், உம்ரான் மாலிக்
இம்பாக்ட் ப்ளேயர்கள்:
அப்துல் சமத், விவ்ராந்த் சர்மா, கிளென் பிலிப்ஸ், மயங்க் தாகர், வாஷிங்டனஜ் சுந்தர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
குர்பாஸ், சுனில் நரைன், ஜெகதீசன், ராணா, ஆர்.சிங், ரஸெல், பெர்குசன், ஷர்துல் தாக்கூர், உமேஷ்யாதவ், சர்மா, வருண் சக்கரவர்த்தி.
இம்பாக்ட் வீரர்கள்:
மன்தீப் சிங், அங்குல் ராய், வெங்கடேஷ் ஐயர், டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா.
நேருக்கு நேர்:
ஐ.பி.எல். வரலாற்றில் ஹைதராபாத் அணியுடன் ஒப்பிடும்போது கொல்கத்தா அணி மிகவும் பலம்வாய்ந்த அணியாக உள்ளது. இதுவரை இரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 13 முறையும், 8 முறை சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் கொல்கத்தா அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதிய போட்டியில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி 187 ரன்களையும், சன்ரைசர்ஸ் அணி 209 ரன்களையும் தங்களது அதிகபட்சமாக பதிவு செய்துள்ளன.
முக்கிய வீரர்கள்:
குறைந்தபட்ச ரன்னாக கொல்கத்தா அணி 101 ரன்களையும், சன்ரைசர்ஸ் அணி 115 ரன்களையும் பதிவு செய்துள்ளனர். போட்டி தற்போது நடக்கும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மொத்தம் 79 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 32 முறையும், 2வது பேட் செய்த அணி 47 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் கடந்த போட்டியில் அசத்திய ரிங்குசிங், ரஸல், சுனில்நரைன், வெங்டேஷ் ஐயர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். சன்ரைசர்ஸ் அணியில் திரிபாதி, மார்க்ரம், மார்கண்டே, நடராஜன் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: Hardik Pandya Fined: பாண்ட்யாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்...! நடப்பு ஐ.பி.எல்.லில் 3வது கேப்டன்..! என்னதான் காரணம்..?