சிஎஸ்கே முதல் பேட்டிங்கும், ஐபிஎல் 2021 தொடரும் : வரலாற்றை மாற்றி எழுதி கோப்பையை வெல்லுமா?
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 5 முறை இதுவரை முதலில் பேட்டிங் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் தோனி, டூபிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்,ராயுடு,உத்தப்பா, ஜடேஜா, ஷர்துல் தாகூர்,பிராவோ, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் கொல்கத்தா அணியில் மோர்கன்,தினேஷ் கார்த்திக், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி,பெர்குசன், ராகுல் திரிபாதி, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
IPL 2021 : சி.எஸ்.கேவில், இவர்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி ஐ.பி.எல் மேட்ச்சா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்#CSK #KKR #IPL2021 https://t.co/kkkgZ2rbe6
— ABP Nadu (@abpnadu) October 15, 2021
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 5 முறை முதலில் பேட்டிங் செய்துள்ளது. அந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி யுஏஇயில் ஐபிஎல் தொடங்கிய பிறகு 6 போட்டிகளில் சேஸ் செய்துள்ளது. அந்தப் போட்டிகள் அனைத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் சென்னை அணி இன்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. எனவே இந்த ஸ்டாட்ஸை சென்னை அணி இன்று உடைத்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Super Kings Going Miles together 🦁#CSKvKKR #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/fQivdaXwDG
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த இரண்டு இறுதி போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணி வென்றுள்ளது. இன்று தன்னுடைய மூன்றாவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி பங்கேற்றுள்ளது. ஆகவே சென்னை இன்று இந்த கொல்கத்தா அணியின் இறுதிப் போட்டி வெற்றி வேட்டையையும் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Start the Whistles… 🥳💛#WhistlePodu #Yellove #CSKvKKR 💛🦁 https://t.co/PN6GpNZW8g
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 15, 2021
மேலும் படிக்க: சி.எஸ்.கேவில், இவர்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி ஐ.பி.எல் மேட்ச்சா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்