மேலும் அறிய

IPL CSK vs GT Final: எத்தனை மணிக்கு தொடங்கினால் எத்தனை ஓவர்கள் வீசப்படும்..? இதோ தகவல்கள்..!

அகமதாபாத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இறுதிப்போட்டி நடத்த வாய்ப்பு உள்ளது.

16வது சீசன் ஐ.பி.எல். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோப்பையை கைப்பற்றுவதற்கான மோதலில் குஜராத் – சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே ஐ.பி.எல். அட்டவணையில் அறிவித்தபடி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அகமதாபாத்தில் இன்று மாலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக, போட்டி தொடங்குவதற்கான நேரத்திலும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டே இருந்தது. சுமார் 8.30 மணிக்கு பிறகு மழை விட்ட காரணத்தால் மைதானத்தில் தேங்கியிருந்த நீர் உடனடியாக அகற்றப்பட்டு, மைதானம் தயார் செய்யப்பட்டது. டாஸ் போடுவதற்காக மைதானம் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

போட்டி 9.35 மணிக்கு பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இதன்படி, ஆட்டம் 9.45 மணியளவில் தொடங்கினால் இரு அணிகளின் தரப்பிலும் 1 ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர் போட்டியாக இறுதிப்போட்டி நடத்தப்பட இருந்தது. ஆனால், தற்போது வரை மழையே பெய்து வருகிறது. 
  • ஒருவேளை போட்டி 10 மணியளவில் தொடங்கும் சூழல் ஏற்பட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும்.
  • ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 10.30 மணிக்கு தொடங்கினால் 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும்.
  • ஆட்டம் 7 ஓவர்களாக நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11.56 மணி வரை போட்டியை நடத்துவதற்கான சூழல் இருக்குமா? என்று நடுவர்கள் ஆய்வு செய்வார்கள். 
  • மழை விடாமல் தொடர்ந்து பெய்து வந்தால் போட்டி இன்று ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் டே-வான நாளை போட்டி நடைபெறும்.

அகமதாபாத் மைதானத்தில் தற்போது வரை மழையின் ஆதிக்கம் நீடித்து வருவதால் போட்டி தொடங்குமா? தொடங்காதா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. மைதானத்தில் குழுமியுள்ள குஜராத் – சென்னை ரசிகர்கள் இறுதிப்போட்டி நடந்துவிடாதா? என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

மழை நின்றபின் போட்டி தொடங்கப்பட்டாலும் மழையின் தாக்கம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல, ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டால் இரு அணி வீரர்களும் முழுவதுமே அதிரடியாகவே ஆடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, ஆட்டத்தின் குறுக்கே மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் ரன்ரேட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால், முதலில் பேட் செய்யும் அணியும், இலக்கை நோக்கி பேட் செய்யும் அணியும் அதிரடியாக ஆடவே முயற்சிப்பார்கள்.

மேலும் படிக்க: CSK vs GT IPL 2023 Final LIVE Score: அகமதாபாத்தில் விளையாடும் மழை; குறைக்கப்படும் ஓவர்கள்; ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

மேலும் படிக்க: Ambati Rayudu Retirement: இன்றுதான் கடைசி... ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு - சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிர்ச்சி

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget