CSK vs GT IPL 2023 Final LIVE Score: இறுதி பந்தில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்..!
CSK vs GT IPL 2023 Final LIVE Score: 16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
LIVE
Background
ஐபிஎல் தொடரில் ரிசர்வ் டே முறையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ( CSK vs GT IPL 2023 Final ) சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா, குஜராத்தா என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.
குறுக்கே வந்த கனமழை:
ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவையும் நீர்த்து போகச் செய்தது அகமதாபாத்தில் கொட்டி தீர்த்த கனமழை. மழை சில மணி நேரம் இடைவெளி விட்டால் கூட போட்டியை நடத்திவிடலாம் என, ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வந்தது. இதனால், கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திலேயே காத்துக்கிடந்தனர். இரவு 11 மணிக்குப் பிறகும் கூட மழை விடாததால், ரிசர்வ் டே முறையில் இறுதிப்போட்டி இன்று நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
இன்று இறுதிப்போட்டி:
இதையடுத்து, ரிசர்வ் டே முறையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியின் நேரலையை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே அமைகிறது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக அமையலாம். அதேநேரம், 180 ரன்களுக்கும் எதிரணியை கட்டுப்படுத்துவதும் அவசியமாக கருதப்படுகிறது.
சிறப்பாக செயல்பட வாய்ப்பு:
இன்றைய போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் முகமது ஷமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
உத்தே அணி விவரம்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
குஜராத்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு - அதேநேரம் தோனி மேஜிக் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது
CSK vs GT IPL 2023 Final LIVE: கோப்பையுடன் சென்னை..!
கோப்பையுடன் சென்னை அணி வீரர்கள்.
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦! 🏆
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Chennai Super Kings Captain MS Dhoni receives the #TATAIPL Trophy from BCCI President Roger Binny and BCCI Honorary Secretary @JayShah 👏👏 #CSKvGT | #Final | @msdhoni pic.twitter.com/WP8f3a9mMc
CSK vs GT IPL 2023 Final LIVE: 5வது கோப்பையை கைப்பற்றிய சென்னை..!
2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என மொத்தம் 5 முறை கோப்பைய கைப்பற்றியுள்ளது.
CSK vs GT IPL 2023 Final LIVE: ரசிகர்களுக்காக அடுத்த ஆண்டும் விளையாடுவேன்..!
16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றது. அதன் பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, நான் எனது ஓய்வை அறிவிக்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது. ஆனால் ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடலாம் என இருக்கிறேன். அனைவருக்கு நன்றி என்று கூறிவிட்டு விலகிவிடுவது எளிது; ஆனால் அது மனதுக்கு கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில் வரும் 9 மாதங்களில் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக அடுத்த சீசன் விளையாட முயற்சிப்பது தான் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் செய்வதாக இருக்கும்.
அது ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்; ஆனால் அது உடலுக்கு எளிதாக இருக்காது என தோனி கூறியுள்ளார். மேலும், இந்த சீசனின் தொடக்கத்தில் ரசிகர்கள் எனது பெயரை முழங்கும் போது எனக்கு கண்களில் நீர் தேங்கியது எனவும் கூறியுள்ளார்.
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவேன் எனக் கூறியுள்ளது சென்னை அணி ரசிகர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CSK vs GT IPL 2023 Final LIVE: அதிக ரன்கள் எடுத்தவர்- சுப்மன் கில்
இந்த சீசனில் 890 ரன்கள் சேர்த்த கில்லுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.
CSK vs GT IPL 2023 Final LIVE: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் - முகமது ஷமி..!
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் அதாவது 28 விக்கெட்டுகள் விழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பி முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.