IPL closing Ceremony: மாஸ்டர், கேஜிஎஃப் பாடல்களுடன் கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழா .. !
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாக வண்ணமையமான நிறைவு விழா நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதயல் ல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாக ஐபிஎல் தொடரின் நிறைவு விழா நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 83 திரைப்பட பாடலுடன் தன்னுடைய நடனத்தை தொடங்கினார். அதன்பின்னர் அவர் மாஸ்டர் திரைப்பட்டத்தின் பாடல் மற்றும் கே.ஜிஎஃப் திரைப்படத்தின் பாடல் உள்ளிட்டவற்றிற்கு நடனமாடினார். அதைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவரும் சில தமிழ் பாடல்களை பாடி அசத்தினார்.
@neetimohan18 Dil and dhadkan dono ruk gaye they, what a performance and you are looking too beautiful @arrahman You are genius and have made this IPL 2022 final a bit more special @RanveerOfficial Hatsoff to the energy always a superstar pic.twitter.com/oNo7nWJuud
— OMG_its_Radhe (@bawaalkyun) May 29, 2022
இறுதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை பாடினர். அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஒரு சிறப்பு நிகழ்ச்சி இருந்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் நிறைவு விழா முடிவிற்கு வந்தது. முன்னதாக இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு முன்பாக உலகிலேயே நீளமான ஜெர்ஸி ஒன்று ஆடுகளத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒரு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்த உலக சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்