IPL Auction 2022: மெகா ஏலத்திற்கு முன்பு 10 அணிகளின் கையிருப்பு இது தான்! மொத்தம் எவ்வளவு கோடி? - முழு விவரம்
IPL Auction 2022 Team Purse Remaining: ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஐபிஎல்(IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய அணி வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்நிலையில், தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்காக செலவு செய்த பணம்போக ஒவ்வொரு அணிக்கும் மீதம் இருக்கும் பணம் எவ்வளவு(Remaining Purse Value) என்பது பற்றிய முழு விவரம் இதோ:
அணி | தக்க வைக்கப்பட்ட வீரர்கள் | வெளிநாட்டு வீரர்கள் | தக்க வைக்கப்பட்டதற்கான செலவு | மீதமுள்ள பணம் |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 4 | 1 | 42 கோடி ரூபாய் | 48 கோடி ரூபாய் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 4 | 2 | 34 கோடி ரூபாய் | 48 கோடி ரூபாய் |
டெல்லி கேப்பிடல்ஸ் | 4 | 1 | 39 கோடி ரூபாய் | 47.50 கோடி ரூபாய் |
மும்பை இந்தியன்ஸ் | 4 | 1 | 42 கோடி ரூபாய் | 48 கோடி ரூபாய் |
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | 3 | 1 | 33 கோடி ரூபாய் | 57 கோடி ரூபாய் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 3 | 1 | 22 கோடி ரூபாய் | 68 கோடி ரூபாய் |
பஞ்சாப் கிங்ஸ் | 2 | 0 | 16 கோடி ரூபாய் | 72 கோடி ரூபாய் |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 3 | 1 | 28 கோடி ரூபாய் | 62 கோடி ரூபாய் |
குஜராத் டைட்டன்ஸ் | 3 வீரர்களை எடுத்தது | 1 | 38 கோடி ரூபாய் | 52 கோடி ரூபாய் |
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் | 3 வீரர்களை எடுத்தது | 1 | 30.2 கோடி ரூபாய் | 59 கோடி ரூபாய் |
ஐபிஎல் ஏலம் எங்கு, எப்போது நடைபெறும்: பெங்களூரு, பிப்ரவரி 12, 13 - காலை 11 மணி முதல்
நேரலை: டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும் நேரலையை காணலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்