மேலும் அறிய

IPL 2026: மொத ரவுண்டிற்கே நாக்-அவுட் ஆன CSK - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் - டாப் 4 இடங்களில் எந்த அணிகள்?

IPL 2026 Points Table: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்தை பிடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

IPL 2026 Points Table: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் 2026 கோலாகலம்..

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முதலே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய அணிகள் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை அநாயசமாக சேஸ் செய்து அதிரடியாக வெற்றிகளை குவித்தன. அதேநேரம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் அட்டாகசமான பந்துவீச்சால் எதிரணிகளை திணறடித்து வெற்றியை வசப்படுத்தின. அந்த வகையில் போட்டியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் தலா ஆட்டத்தில் பங்கேற்று முடித்துள்ளன. அதனடிப்படையில் முதல் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் 2026 - புள்ளிப்பட்டியல் நிலவரம்

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
ராஜஸ்தான் 1 1 0 2 4.171
பெங்களூரு 1 1 0 2 2.907
டெல்லி 1 1 0 2 1.397
மும்பை 1 1 0 2 0.687
பஞ்சாப் 1 1 0 2 0.509
குஜராத் 1 0 1 0 -0.509
கொல்கத்தா 1 0 1 0 -0.687
லக்னோ 1 0 1 0 -1.397
ஐதராபாத் 1 0 1 0 -2.907
சென்னை 1 0 1 0 -4.171

ராஜஸ்தான் ஆதிக்கம்

ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தாங்கள் விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியை பதிவு செய்து தலா இரண்டு புள்ளிகளை ஈட்டியுள்ளன. இருப்பினும் அதிரடியான பேட்டிங் மூலம் 12.1 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கடைசி இடத்தில் சென்னை..

இதனிடையே முதல் போட்டியில் தோல்வியுற்ற குஜராத், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து தொடங்கி முறையே புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக சென்னை அணி -4.171 என்ற மோசமான ரன் ரேட்டில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

முதல் வெற்றி யாருக்கு?

இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் முதல் போட்டியில் தோல்வியுற்ற கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தவைல் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும், ஐதராபாத் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக ஐதராபாத் அணி 278 ரன்களையும், குறைந்தபட்சமாக கொல்கத்தா அணி 101 ரன்களையும் சேர்த்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறக்கூடும். இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget