RCB Retention List: சர்ச்சையில் சிக்கிய ஆர்சிபி! போக்சோ வழக்கில் யாஷ் தயாள்.. ஆனாலும் அணியில் எப்படி? நெட்டிசன்ஸ் கேள்வி
யாஷ் தயாள் மீது தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆர்சிபி அவரை தக்கவைத்துக் கொண்டது நிலையில் அணியின் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐபிஎல் 2026க்கான தக்கவைப்பு பட்டியலில் இரண்டு பாலியல் வழக்குகள் பதியபட்டுள்ள ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் பெயர் இடம் பெற்றுள்ளது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் Retention List:
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக்கொண்டது. குறிப்பாக நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை தக்க வைத்துக்கொண்டது.
யாஷ் தயாள் நீக்கம் இல்லை:
இந்தப்பட்டியலில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சேர்த்துள்ளது. ஆர்சிபியின் இந்த முடிவு , தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. யாஷ் தயாள் மீது தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பாலியல் வழக்குகள்:
காசியாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இவை இரண்டும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை. இருப்பினும் ஆர்சிபி அவரை தக்கவைத்துக் கொண்டது நிலையில் அணியின் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் இந்த தக்கவைப்பு குறித்து கண்டங்களை எடுத்து வைக்கின்றனர். கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் யாஷை தக்கவைத்துக்கொள்வதன் மூலம், ஆர்சிபி அணி சமூகத்திற்கு எதிர்மறையான செய்தியை அனுப்புகிறது என்றும் சிலர் கூறினர்.
Coz Yash Dayal has two allegations in two different states, one of them under POCSO..
— Noah (@PantasticNoah) November 15, 2025
யாஷ் தயாளைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து ஆர்சிபி அணி தனி அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிசிசிஐ-யைத் தொடர்பு கொண்டதா என்பதையும் அணி தெளிவுபடுத்தவில்லை. ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்குப் பிறகு யாஷ் தயாள் எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, ஆர்சிபி யாஷ் தயாளை ₹5 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
What a shame
— Cric Nerd (@CheeYaarr) November 15, 2025
Kohli and Yash Dayal in the same poster... https://t.co/JJIT8Dr5av
கிரிக்கெட் விளையாட தடை:
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வழக்குகளின் தீவிரத்தன்மை காரணமாக, UP T20 லீக்கின் ஏற்பாட்டாளர்கள் யாஷ் தயாள் லீக்கில் பங்கேற்க தடை விதித்தனர். அவர் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்த செய்யப்பட்டு இருந்தார். மேலும் அவரின் ரஞ்சி அணியான உத்தரப் பிரதேச அணிக்காக அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.





















