IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதரபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் தொடக்கத்தில் அபார வெற்றி பெற்று வந்த டெல்லி அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
இந்த தொடரில் இருந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட நிலையில் இன்றைய போட்டியில் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்து வரும் போட்டிகளிலும் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சன்ரைசர்ஸ் தொடரில் நீடிக்கும்.
சன்ரைசர்ஸ்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பாட்கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ப்ளேயிங் லெவன்:
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், சச்சின் பேபி, கிளாசென், அனிகெத் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், உனத்கட், ஜீசன் அன்சாரி, ஈசன் மலிங்கா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் டுப்ளிசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், ஸ்டார்க், சமீரா, குல்தீப் யாதவ், நடராஜன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
பேட்டிங் பட்டாளம்:
இந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் களமிறங்கியுள்ளார். அதுவும் தனது முன்னாள் அணி ஹைதரபாத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளார். டெல்லி அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய கருண் நாயர் டக் அவுட்டானார். இதையடுத்து, டுப்ளிசிஸ் - அபிஷேக் போரல் ஆடி வருகின்றனர். கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், ஸ்டப்ஸ், விப்ராஜ் பேட்டிங்கில் அசத்தினால் மட்டுமே டெல்லி அணி வலுவான ரன்களை குவிக்க முடியும்.
பந்துவீச்சு:
சன்ரைசர்ஸ் அணியில் இன்றைய போட்டியில் கம்மின்ஸ், உனத்கட், அன்சாரி, ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் அசத்தினால் டெல்லிக்கு சவால் கண்டிப்பாக இருக்கும். அதேசமயம், டெல்லி அணியில் ஸ்டார்க், சமீரா, குல்தீப் யாதவ், நடராஜன் சிறப்பாக பந்துவீசினால் சன்ரைசர்ஸ்க்கு நெருக்கடி தரலாம்.
சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, கிளாசென், அனிகெத் வர்மா, அபினவ் மனோகர் பேட்டிங்கில் அசத்தினால் இமாலய இலக்கையும் எட்டலாம்.



















