IPL 2025 RR vs DC: ரன்மழை பொழியுமா டெல்லி? சாம்சனின் பவுலிங் முடிவு கை கொடுக்குமா?
IPL 2025 RR vs DC: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

IPL 2025 RR vs DC:
ஐபிஎல் தொடரில் நேற்று இன்று நடக்கும் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் வெற்றிக்கு பிறகு மும்பையிடம் போராடி தோற்ற டெல்லி அணியும், தொடர் தோல்வியில் தவித்து வரும் ராஜஸ்தான் அணியும் இன்று மீண்டும் தங்களது வெற்றிப் பாதைக்குத் திரும்ப களமிறங்கியுள்ளன.
நடப்பு தொடரைப் பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காட்டிலும் டெல்லி அணி பலமிகுந்த அணியாக திகழ்ந்து வருகிறது. டெல்லி அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் அவர்கள் தோற்றாலும் கருண் நாயரின் பேட்டிங் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால், இன்றைய போட்டியிலும் கருண் நாயரின் பேட்டிங்கிற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். கேப்டன் அக்ஷர் படேல் பேட்டிங், பவுலிங்கில் அசத்தினால் டெல்லிக்கு பெரும் பக்கபலமாக இருக்கும்.
டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசும் என்று கூறினார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. மேலும், கடந்த போட்டியில் சொதப்பிய ஜேம்ஸ், ஸ்டப்ஸ், ராகுல், அசுதோஷ் சர்மா இன்றைய போட்டியில் அசத்தினால் கண்டிப்பாக டெல்லி அணிக்கு இந்த போட்டி கம்பேக்காக அமையும். அதேசமயம், ராஜஸ்தான் அணியில் கேப்டன் சாம்சன், இளம் வீரர் ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜோரல், ஹெட்மயர், நிதிஷ் ராணா பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இரு அணிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும். டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஸ்டார்க், குல்தீப், மோகித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினால் ராஜஸ்தானுக்கு நெருக்கடி ஆகும்.
ப்ளேயிங் லெவன்:
டெல்லி அணியில் ஜேம்ஸ் ப்ரேசர், கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், கருண் நாயர், அக்ஷர் படேல், ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா

