IPL 2025 RCB vs MI: வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? மும்பை முதலில் பவுலிங்! ஆர்சிபி முதலில் பேட்டிங்!
IPL 2025 RCB vs MI: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று வான்கடே மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.
ஆர்சிபி முதலில் பேட்டிங்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் பேட் செய்கிறது. சாெந்த மண்ணில் ஆடும் பலம், பும்ரா அணிக்கு திரும்பியது உள்ளிட்ட கூடுதல் பலத்துடன் மும்பை அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. அதேசமயம், வான்கடே மைதானத்தில் வலுவான இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் ஆர்சிபி அணி அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் vs பவுலிங்:
பும்ரா, போல்ட், விக்னேஷ் புத்தூர், தீபக் சாஹர், சான்ட்னர் என வலுவான பவுலிங் பட்டாளத்துடன் மும்பை அணி களமிறங்குகிறது. குறிப்பாக, பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இந்த வலுவான பவுலிங் பட்டாளத்திற்கு எதிராக பில் சால்ட், விராட் கோலி, படிக்கல், படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டேவிட் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
அதேபோல, ரோகித் சர்மா, வில் ஜேக்ஸ், ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பாண்ட்யா, நமன் தீர் என நீண்ட பேட்டிங் பட்டாளம் கொண்ட மும்பை அணியை புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யஷ் தயாள், குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன் தங்களது பந்துவீச்சால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த போட்டி சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியாக அமைந்துள்ளது. மும்பை அணி 4 போட்டிகளில் 1 வெற்றியுடனும், ஆர்சிபி 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வியுடனும் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்குத் திரும்பவே இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது.
வான்கடே பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு ரன்மழை பொழியும் போட்டியாகவும் அமையும் என்பதிலும் சந்தேகமும் இல்லை.
ப்ளேயிங் லெவன்:
மும்பை அணியில் வில் ஜேக்ஸ், ரிகெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பாண்ட்யா, நமன்தீர், சான்ட்னர், தீபக் சாஹர், போல்ட், பும்ரா, விக்னேஷ் புத்தூர் இடம்பிடித்துள்ளனர்.
ஆர்சிபி அணியில் பில் சால்ட், படிக்கல், படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டேவிட், பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் களமிறங்குகின்றனர்.




















