PBKS vs RCB: பட்டையை கிளப்பிய படிக்கல்-கோலி .. பஞ்சரான பஞ்சாப்... ஆர்சிபி அசால்ட் வெற்றி
PBKS vs RCB: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்ட்ன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் சொதப்பல் பேட்டிங்:
பஞ்சாப் தங்களது பேட்டிங்கை சிறப்பாக தொடங்கினாலும் மிடில் ஓவர்களில் ஆர்சிபி அணி ஸ்பின்னர்களை ஆட முடியாமல் தத்தளித்தனர், குறிப்பாக க்ருணால் பாண்டியா அற்புதமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார். பஞ்சாப் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துக்கொண்டே இருந்தது.
குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆர்சிபி அணி வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக யார்க்கர் வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 31 ரன்களும், யான்சன் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி அணி தரப்பில் க்ருனால் பாண்டியா, சுயாஷ் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சால்ட் ஏமாற்றம்:
158 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது, அர்ஷ்தீப் சிங்கின் ஓவரிக் அதிரடி பேட்ஸ்மேனான ஃபில் சால்ட் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இம்பேக்ட் வீரராக தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்.
கோலி-படிக்கல் ஜோடி அபாரம்:
என்னதான் ஆரம்பமே விக்கெட் போனாலும் படிக்கால் பாசிட்டிவாக தனது இன்னிங்ஸ்சை தொடங்கினார்,பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சர்களை மாற்றி பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை, சிறப்பாக விளையாடிய படிக்கல் அரைசதம் அடித்து அசத்தினார், 22 இன்னிங்ஸ்களுக்கு பிறகு படிக்கல் அடித்த முதல் அரை சதம் இதுவாகும். 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆர்சிபி வெற்றி:
அடுத்த வந்த கேப்டன் படிதார் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். வெற்றிக்கான ரன்களை ஜிதேஷ் சர்மா சிக்சருடன் அடித்து முடித்து கொடுத்தார். வெள்ளிக்கிழமை பெங்களூரில் ஏற்ப்பட்ட தோல்விக்கு ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ்சை இன்று பழித்தீர்த்தது.