IPL 2025 PBKS vs KKR: இதான்டா மேட்ச்..! சாஹல் சம்பவம்.. கடைசி வரை திக் திக்! கொல்கத்தாவை கொளுத்திய பஞ்சாப்!
IPL 2025 PBKS vs KKR:

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி தனது பந்துவீச்சால் துவம்சம் செய்தது.
112 ரன்கள் டார்கெட்:
ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரது பந்துவீச்சில் பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து,112 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பஞ்சாப் அணி தனது பந்துவீச்சால் குடைச்சல் அளித்தது.
பவுலிங் மிரட்டல்:
அர்ஷ்தீப் சிங், சாஹல், மேக்ஸ்வெல் ஆகியோர் பந்துவீச்சு தாக்குதல் நடத்தினர். எளிதாக இலக்கை எட்டிவிடலாம் என்று களமிறங்கிய சுனில் நரைன் - டி காக் ஜோடியை ஜான்சென் தனது பந்துவீச்சால் பிரித்தார். சுனில் நரைன் 5 ரன்களில் அவுட்டாக, 2வது ஓவரிலே டி காக் 2 ரன்னில் அவுட்டானார்.
சாஹல் சம்பவம்:
7 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு ரஹானே - ரகுவன்ஷி ஜோடி மீட்டது. ரகானே ஒத்துழைப்பு தர ரகுவன்ஷி அதிரடி காட்டினார். கேப்டன் ரகானேவை 17 ரன்களில் சாஹல் சுழலில் எல்பிடபுள்யூ ஆனார். ஆனால், அவரை சாஹல் தனது சுழலால் காலி செய்தார். சிறப்பாக அதிரடி காட்டிய அவரை சாஹல் தனது சுழலால் 28 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதன்பின்பு, கொல்கத்தாவிற்கு பஞ்சாப் தனது பந்துவீச்சால் பயம் காட்டியது. குறிப்பாக, சாஹல் சுழலில் விக்கெட்டுகள் சரிந்தது. அவருக்கு மேக்ஸ்வெல்லும் ஒத்துழைப்பு தந்தார். மேக்ஸ்வெல் சுழலில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னில் எல்பிடபுள்யூ ஆக, சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கை சாஹல் 2 ரன்னில் சாஹல் சுழலில் அவுட்டானார்.
கொல்கத்தா மீது அழுத்தம்:
பின்னர், சாஹல் சுழலில் மற்றொரு அதிரடி ஆல்ரவுண்டர் ராமன்தீப்சிங் டக் அவுட்டாக, ஹர்ஷித் ராணாவை ஜான்சென் 3 ரன்னில் போல்டானார். 79 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஒட்டுமொத்த அழுத்தமும் ரஸல் மீது விழுந்தது. கடைசி 43 பந்துகளில் 33 ரன்கள் கொல்கத்தா வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே வந்தது.
அச்சுறுத்திய ரஸல்:
பந்துவீச்சாளர்களை ஸ்ரேயாஸ் ஐயர் நன்கு சமயோஜிதமாக பயன்படுத்தினார். ஆனால், ரஸல் சாஹல் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். அதே ஓவரில் பவுண்டரியும் விளாச பஞ்சாப் அணி மீது அழுத்தம் திரும்பியது. இதனால், கடைசி 36 பந்துகளில் 17 ரன்கள் கொல்கத்தா வெற்றிக்குத் திரும்பியது. இந்த நிலையில், அர்ஷ்தீப்சிங் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில் வைபவ் அரோரா அவுட்டானார்.
த்ரில் வெற்றி:
இதனால், கடைசி 30 பந்துகளில் கொல்கத்தா வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால், வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சரிசமமாக மாறியது. ஆனால், ஜான்சென் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்ட முயற்சித்த ரஸல் போல்டானார்.
இதனால், இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சாஹல் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜான்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷேவியர், அர்ஷ்தீப்சிங், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

