IPL 2025 MI vs SRH: கடவுளாக மாறி காப்பாற்றிய கிளாசென்! தத்தளித்த ஹைதரபாத் மும்பைக்கு வைச்ச டார்கெட் என்ன?
IPL 2025 MI vs SRH: சன்ரைசர்ஸ் அணி மும்பைக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடதது, மும்பைக்கு எதிராக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினார்.
13 ரன்களுக்குள் 4 விக்கெட்:
ஆட்டத்தின் முதல் ஓவரிலே சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலே போல்ட் பந்துவீச்சில் ஹெட் டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் அடுத்த ஓவரிலே அவுட்டானார். அம்பயர் ஒயிட் கொடுக்கச் சென்றபோது, பந்துவீச்சாளர் தீபக் சாஹர் அவுட் கேட்காதபோதும் தானாக அவர் மைதானத்தை விட்டுச் சென்றார். அவர் அவுட்டாகிச் சென்ற விதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்து அதிரடி காட்ட முயற்சிக்க அவரையும் போல்ட் அவுட்டாக்கினார். அவர் 8 பந்துகளில் 1 சிக்ஸருடன் 8 ரன் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், வந்த நிதிஷ் ரெட்டி 2 ரன்னில் அவுட்டாக 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ்.
கடவுளாக மாறி காப்பாற்றிய கிளாசென்:
இதனால், ஆர்சிபியின் மிகவும் குறைவான இலக்கான 49 ரன்களுக்குள் சன்ரைசர்ஸ் சுருண்டு விடுமோ என்ற அச்சம் ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்து வந்த அனிகெத் வர்மா 12 ரன்களுக்குள் அவுட்டாக 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ். அப்போது அவர்களுக்காக கிளாசென் - இம்பேக்ட் வீரர் அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி சன்ரைசர்சை காப்பாற்றியது. தடுமாறிக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ்காக இந்த ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக கிளாசென் பவுண்டரிகளாக விளாசினார். இதனால், 50 ரன்களை கடக்குமா என்ற நிலையில் இருந்த ஹைதரபாத் 100 ரன்களை கடந்தது.
கிளாசென் மிரட்டல் அடி:
கிளாசெனுக்கு ஒத்துழைப்பு தந்த அபினவ் மனோகரும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். தொடக்கத்திலே இருந்த ஜோடி ரன்களை எடுக்காததால் இந்த ஜோடி அதிரடி காட்டியும் வலுவான இலக்கை நிர்ணயிப்பதில் சவால் இருந்தது. தீபக் சாஹர், போல்ட், பும்ரா, சான்ட்னர், பாண்ட்யா, விக்னேஷ் புத்தூர் என யார் வீசினாலும் இந்த ஜோடி திறம்பட எதிர்கொண்டது.
கடைசியாக கிளாசென் பும்ரா பந்தில் அவுட்டானார். அவர் 44 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கிளாசெனுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த அபினவ் மனோகர் 37 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார். கடைசியில் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது.
மும்பைக்காக போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, பாண்ட்யா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 50 ரன்கள் எட்டுமா? என்ற நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் 143 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்தது பெரிய விஷயமாக சன்ரைசர்ஸ் ரசிகர்கள் கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

