MI Vs CSK: 3 மணி நேரத்தில் புதிய சாதனை - கம்பேக் கொடுத்த ரோகித், புள்ளிப்பட்டியல் நிலை என்ன? சென்னை வீழ்ச்சி
IPL 2025 MI Vs CSK: மும்பை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

IPL 2025 MI Vs CSK: இந்திய வீரர்களில் வேறு யாரும் படைத்திடாத சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
3 ஆண்டு காத்திருப்பு:
ஐபிஎல் வரலாற்றில் தலா 5 முறை கோப்பை வென்ற மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி என்பது, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பை பெறும். இந்நிலையில் தான், கடந்த 2023ம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையே நடந்த 5 போட்டிகளில், ஒன்றில் கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை. நடப்பு தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூட சென்னை அணியே வெற்றி பெற்றது. இந்த சூழலில் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணி நிர்ணயித்த 177 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
ரோகித் சர்மா கம்பேக்:
நடப்பு தொடரில் மும்பை அணியில் முழு நேர வீரராக இன்றி, இம்பேக் பிளேயராகவே ரோகித் சர்மா களம் கண்டு வருகிறார். ஆனால், பேட்டிங்கில் பெரிதும் சோபிக்காமல் தொடர்ந்து சொதப்பி வந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், கடும் விமர்சனங்களும் அவர் மீது குவிந்த வந்தன. நேற்றைய போட்டிக்கு முன்பு வரை களம் கண்ட 6 போட்டிகளில் ஒன்றில் கூட 30 ரன்களை கூட ரோகித் சர்மா தாண்டவில்லை. இந்நிலையில் தான், சென்னை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும்.
3 மணி நேரத்தில் புதிய சாதனை:
நேற்று நடந்த முதல் போடிட்யில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி, கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற, ரோகித் சர்மாவின் சாதனையை வென்றார். ஆனால், அடுத்த மூன்று மணி நேரத்தில் நடந்து முடிந்த சென்னைக்கு எதிரான போட்டியில், ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 20 ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரே இந்தியர் என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
அதிக ரன்கள்:
அதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளிவிட்டு ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி,
- 8326 ரன்கள் - விராட் கோலி*
- 6786 ரன்கள் - ரோகித் சர்மா*
- 6769 ரன்கள் - ஷிகர் தவான்
- 6565 ரன்கள் - டேவிட் வார்னர்
- 5528 ரன்கள் - சுரேஷ் ரெய்னா
கூட்டணியில் அசத்தல்:
ரோகித் மற்று சூர்யகுமார் யாதவ் கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தது. சென்னை அணிக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டிற்கு மும்பை சேர்த்த மூன்றாவது அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ரோகித் சர்மா மற்றும் சச்சின் கூட்டணி 126 ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளது. ரோகித் மற்றும் சிம்மன்ஸ் கூட்டணி 119 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
| நிலை | அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | என்.ஆர்.ஆர். | புள்ளிகள் |
| 1 | குஜராத் | 7 | 5 | 2 | 0.984 | 10 |
| 2 | டெல்லி | 7 | 5 | 2 | 0.589 | 10 |
| 3 | ஆர்சிபி | 8 | 5 | 3 | 0.472 | 10 |
| 4 | பஞ்சாப் | 8 | 5 | 3 | 0.177 | 10 |
| 5 | லக்னோ | 8 | 5 | 3 | 0.88 (0.88) | 10 |
| 6 | மும்பை | 8 | 4 | 4 | 0.483 | 8 |
| 7 | கொல்கத்தா | 7 | 3 | 4 | 0.547 | 6 |
| 8 | ராஜஸ்தான் | 7 | 2 | 5 | -0.714 | 4 |
| 9 | ஐதராபாத் | 7 | 2 | 5 | -1.217 | 4 |
| 10 | சென்னை | 8 | 2 | 6 | -1.392 | 4 |




















