CSK அணியில் புதிய வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் - யார் இவர்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு பேட்ஸ்மென் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடி, இந்த சீசனில் சி.எஸ்.கே. அணி அதிக தோல்விகளை சந்தித்துள்ளது.
சி.எஸ். கே. அணிக்கு எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆயுஷ் மாத்ரே அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், Gurjapneet Singh-கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரரை சென்னை அணி அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு மஞ்சள் நிறத்திலான போட்டோவை அப்லோடு பதிவிட்டு இருந்தார்.
அதோடு, சி.எஸ்.கே. அணியும் டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்மென்ஸ் வரிசையை சரிசெய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.
ஐ.பி.எல். 18-வது சீசனில் சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாமிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.