Venkatesh Iyer: ரூ.23.75 கோடி போச்சா..! ஸ்ரேயாஷ், கில்லை கழற்றிவிட்ட ஷாருக்கான் - பட்டை நாமம் போட்ட வெங்கடேஷ்
Venkatesh Iyer: நடப்பு தொடரில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் சொதப்பி வரும், கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் அய்யர் மீது கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Venkatesh Iyer: நடப்பு தொடருக்காக வெங்கடேஷ் அய்யரை கொல்கத்தா அணி 23.75 கோடி ரூபாய் ஊதியத்தில் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்விகளில் கொல்கத்தா அணி:
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய, 8 போட்டிகளில் ஐந்தில் தோல்வியை கண்டுள்ளது. குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கிய கடைசி போட்டியில், 199 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் தோல்வியை கண்டது. கேப்டன் ரகானே மட்டும் 50 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள், பங்களிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் மீண்டும் சொதப்பி, 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சொதப்பும் வெங்கடேஷ்:
நடப்பு தொடரில் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கான மற்றொரு சாட்சியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டி அமைந்தது. நடப்பு தொடரில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் தக்கவைக்கப்பட்ட நிலையில், லக்னோ அணிக்கு எதிராக 45 ரன்களும், ஐதராபாத் அணிக்கு எதிராக 60 ரன்களும் சேர்த்ததே அவரது சிறந்த ஆட்டமாக உள்ளது. நேற்றைய போட்டியில் முன்னாள் கொல்கத்தா வீரர் சுப்மன் கில் 90 ரன்கள் விளாசிய நிலையில், வெங்கடேஷும் இன்று சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ஏமாற்றமாகவே அமைந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
வெங்கடேஷ் - ஐபிஎல் 2025
நடப்பு தொடரில் இதுவரை கொல்கத்தா விளையாடிய 8 போட்டிகளிலும் வெங்கடேஷ் களம் கண்டுள்ளார். அதில், மொத்தமாகவே 135 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 140-க்கும் குறைவாக சரிந்துள்ளது. அதேநேரம், தொடக்க வீரராகவும், இரண்டாவது விக்கெட்டுக்கும் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வந்த வெங்கடேஷைம், ஃபினிஷராக களமிறக்கும் நிர்வாகத்தின் முடிவு தவறானது என்றும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். மீண்டும் வெங்கடேஷை தொடக்க வீரர் அல்லது இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரேயாஷ், கில்லுக்கு கொல்கத்தா கல்தா:
இன்று இந்திய அணியின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சுப்மன் கில் கொல்கத்தா அணியில் இருந்து தனத் ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையிலும், கடந்த 2021ம் ஆண்டு ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா அணி கில்லை அணியில் இருந்து விடுவித்தது. அதேநேரம், வெங்கடேஷ் அய்யரை தக்கவைத்தது. அதேபோன்று தான், கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யரையும் அணியில் இருந்து விடுவித்து, பெரும் தொகைக்கு வெங்கடேஷை தக்கவைத்தது. அந்த இரண்டு வீரர்களும் தற்போது தத்தமது அணிகளை வெற்றிகரமாக வழிநடத்தி, பிளே-ஆஃப் சுற்றை நெருங்கும் சூழலில் உள்ளன. இதனை குறிப்பிட்டு பல மீம்ஸ்களும் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன.
வைரலாகும் மீம்ஸ்:
KKR retained Venkatesh Iyer over Shubman Gill in 2021. Four years later, today, Shubman Gill returns to Eden Gardens as the captain of Gujarat Titans. The player they once let go has come back as a global cricket superstar. Maybe this is what success looks like.❤️ pic.twitter.com/CtlizGJmEo
— 👑 (@SG77Era) April 21, 2025
SRK after watching Venkatesh Iyer 's performance 😭#KKRvsGT pic.twitter.com/Sml1Swi3Yc
— 😼 (@MasterrGogo) April 21, 2025
KKR was Beast 👿 in IPL 2024 with Mitchell Starc, Phil Salt, Shreyas Iyer leading from Front 👏🏻
— Richard Kettleborough (@RichKettle07) April 22, 2025
KKR in 2025 looks the weakest team with Venkatesh over priced, Ramandeep flop show, Russell only flexing muscle and rest of the team seems imbalance 🤐
~ What's your take on this 🤔 pic.twitter.com/DI4E1yzwzK




















