வீர தீர சூரன் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி!

Published by: ஜான்சி ராணி

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன். எஸ்.ஜே.சூர்யா , துஷாரா விஜயன் , சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எச் ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. க

மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

வீர தீர சூரன் திரைப்படம் இந்தியளவில் ரூ 49.45 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

விக்ரம் துஷாரா விஜயன் இருவரின் சீன்ஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

வீர தீர சூரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஓ.டி.டி.-யில் வெளியாகிறது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.