லக்னோவை சம்பவம் செய்ய காத்திருக்கும் கில் படை.. தன்மானத்திற்காக ஆடும் பண்ட் சாதிப்பாரா?
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் கில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் வென்று, குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லக்னோவை சம்பவம் செய்யுமா கில் படை?
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், முதல் இரண்டு இடங்களை பிடிக்க 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய சூழலில், 12 போட்டிகளில் விளையாடி, 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குஜராத் அணி. அதேநேரம், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 12 போட்டிகள் விளையாடி, தலா 17 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இறுதி கட்டத்தை எட்டிய ஐபிஎல் தொடர்:
மீதமுள்ள போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை தக்க வைக்க குஜராத் அணி தீவிரம் காட்டி வருகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் கைவசம் இரண்டு போட்டிகளிலும் வென்றால், ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
மும்பையை பொறுத்தவரையில் கடைசி போட்டியில் வெற்றி பெறுவதோடு, பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் கைவசம் உள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றால்தான் MI புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும்.
இந்த சூழலில் தான், அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் கில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன் படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
குஜராத் அணி விவரம்: சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
லக்னோ அணி விவரம்: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ரூர்க்கே.
லக்னோ அணி ஏற்கனவே நடப்பு தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. அதேநேரம், குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்று உறுதியாகிவிடும்.




















