IPL 2025 DC vs GT: அசத்திய அசுதோஷ்.. கலக்கிய கருண்.! 204 ரன்களை எட்டிப்பிடிக்குமா குஜராத்?
IPL 2025 GT vs DC: குஜராத் அணிக்கு டெல்லி அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரில் மிகவும் பலமிகுந்த அணியாக இந்த இரு அணிகளும் உள்ளது.
கருண் நாயர் அதிரடி தொடக்கம்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணிக்கு அபிஷேக் போரல் - கருண் நாயர் அதிரடியாக தொடக்கம் தந்தனர். அபிஷேக் போரல் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய நிலையில் 9 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்து வந்த கே.எல்.ராகுலுடன் இணைந்து கருண் நாயர் அதிரடி காட்டினார்.
ஓவருக்கு 10 ரன்கள்:
கே.எல்.ராகுல் பவுண்டரிகளாக விளாச கருண் நாயர் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். கே.எல்.ராகுல் 14 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு அவுட்டாக, மறுமுனையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த கருண் நாயர் 18 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் பந்தில் அவுட்டானார்.
பின்னர், அக்ஷர் படேல் - ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இதனால் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட் குறையாமலே சென்றது. அதிரடிக் காட்டிக் கொண்டிருந்த ஸ்டப்ஸ் சிராஜ் பந்தில் 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருவன் 31 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், கேப்டன் அக்ஷர் படேல் - அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர்.
அசுதோஷ் அசத்தல்:
இந்த ஜோடி அதிரடி காட்டியது. குறிப்பாக, அசுதோஷ் சர்மா சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்த கேப்டன் அக்ஷர் படேல் 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த விப்ராஜ் முதல் பந்திலே அவுட்டானாலும் அசுதோஷ் சர்மாவின் அதிரடி தொடர்ந்தது. இதனால், டெல்லியின் ரன்வேகம் குறையவே இல்லை.
204 ரன்கள் டார்கெட்:
முகமது சிராஜ், அர்ஷத் கான், ரஷீத்கான், பிரசித் கிருஷ்ணா என பலர் வீசியும் டெல்லியை கட்டுப்படுத்தவில்லை. பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசியாக அதிரடி காட்டிய அசுதோஷ் சர்மா 19 பந்தகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எட்டியது. குஜராத் அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




















