IPL 2025 : அடேங்கப்பா நம்ம லிஸ்ட்லயே இல்லயே இது.. வெளியான ஐபிஎல் போட்டி தேதிகள்
IPL 2025 : அடுத்த மூன்று ஆண்டுக்கான ஐபிஎல் சீசனின் தேதிகளை பிசிசிஐ தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் உட்பட அடுத்த மூன்று ஆண்டுக்கான ஐபிஎல் சீசனின் தேதிகளை பிசிசிஐ தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
🛬 Jeddah#TATAIPLAuction just ✌️ days away‼️ pic.twitter.com/TMVzAUvYLl
— IndianPremierLeague (@IPL) November 22, 2024
ஐபிஎல் சீசன் தேதிகள் :
முன்னெப்போதும் இல்லாத வகையில்,பிசிசிஐ ஆனது அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் 2025 மார்ச் 14 அன்று தொடங்கி மே 25 ஆம் தேதி இறுதி போட்டி நடைப்பெறும். அதே போல் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசன் மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று சீசன்களைப் போலவே 2025 சீசனிலும் 74 போட்டிகள் நடைப்பெறும்.
வியாழன் அன்று உரிமையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று சீசன்களைப் போலவே 2025 சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். இருப்பினும், 2023-27 ஆண்டுக்கான ஒளிப்பரப்பு உரிமைகள் விற்கப்பட்டுவிட்டன. மேலும் 2022 இல் ஐபிஎல் சீசனில் 84 போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டது. அதை 2025 சீசனில் 10 போட்டிகள் குறைவாகவே நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க : Devdutt padikkal : டக் அவுட்டில் இப்படி ஒரு சாதனையா! படிக்கலுக்கு இது தேவையா..
வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு :
ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்திருப்பது பெரும்பாலான நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விளையாட தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியங்களில் இருந்து அனுமதி பெற்றுள்ளனர். இதில் பாக்கிஸ்தான் சேர்ந்த வீரர்கள் இடம்பெறவில்லை, எற்கெனவெ இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையேயான அரசியல் முட்டுக்கட்டை காரணமாக 2008 ஆம் ஆண்டு தொடக்க சீசனுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் யாரும் ஐபிஎல்லில் இடம்பெறவில்லை.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) அதன் அனைத்து வீரர்களுக்கும் - (சர்வதேச மற்றும் உள்நாட்டு) 2025 ஐபிஎல் சீசனில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது. அதே போல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அடுத்த மூன்று ஐபிஎல் சீசன்களுக்கு முழுமையாகக் விளையாடும் 18 மத்திய ஒப்பந்த வீரர்களின் (Central Contract) பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்துள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்காத இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் இந்த பட்டியலில் இருந்து விடுபட்டள்ளார் 2025முதல் 2027 வரை ஐபிஎல் சீசனில் முழுமையாகக் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்: ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாக் க்ராவ்லி, சாம் கரண், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் , ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஒல்லி ஸ்டோன் மற்றும் ரீஸ் டாப்லி.