IPL 2025:விடுவிக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்..ஐபிஎல் ஏலத்தில் எதிர்பார்ப்பு!
ஐபிஎல் அணிகள் விடுவித்த மூன்று முக்கிய வீரர்கள் 20 கோடிக்கு மேல் ஏலத்திற்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐபிஎல் அணிகள் விடுவித்த மூன்று முக்கிய வீரர்கள் 20 கோடிக்கு மேல் ஏலத்திற்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐபிஎல் 2025:
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் தொடர்பான பட்டியலை சமர்பித்தது. இதில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கே.எல்.ராகுலையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பண்டையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரையும் அணியில் இருந்து வெளியேற்றியது.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இவர்கள் மூன்று பேருமே அந்தந்த அணிகள் கேப்டன்கள் என்பது தான். இச்சூழலில் அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்குபெற உள்ளார்கள். அந்த வகையில் எந்த அணிகள் இவர்களை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் 20 கோடிக்கு மேல் ஏலத்தில் செல்ல உள்ள வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்:
கே.எல்.ராகுல்:
கடந்த மூன்று சீசன்களில் கேப்டனாக பணியாற்றிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) வெளியிட்டதைத் தொடர்ந்து கேஎல் ராகுல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தில் நுழைய உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) விக்கெட் கீப்பர்-பேட்டரான இவரை குறிவைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கே.எல்.ராகுலை ஆர்சிபி 20 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பண்ட்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது கேப்டனான ரிஷப் பண்டடை தக்கவைக்காததன் மூலம்ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அனைத்து உரிமையாளர்களும் ரிஷப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், ஐபிஎல் 2025 ஏலத்தில் பண்ட்க்கான ஏலங்கள் ரூ. 20 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இவரை ஏலத்தில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இஷான் கிஷன்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனை விடுவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் கிஷனின் சிறப்பான செயல்பாடுகள், சமீபத்தில் IND vs SA T20I தொடருக்கான இந்திய T20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அவரது வலுவான ஃபார்ம் காரணமாக, IPL 2025 ஏலத்தில் பல அணிகள் அவரை குறிவைக்க வாய்ப்புள்ளது. இதனால் இவரும் 20 கோடிக்கு மேல் ஏலத்தில் அணிகள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.