மேலும் அறிய

IPL 2024 RR vs KKR: இரண்டாவது இடத்தை தக்கவைக்குமா ராஜஸ்தான்.. பதிலடி கொடுக்குமா கொல்கத்தா.. என்ன நடக்கும் இன்று?

IPL 2024 RR vs KKR: கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன.

ஐபிஎல் 2024ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றால் இரண்டாவது இடத்தை தக்க வைக்கும். அந்த அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருந்தாலும், ஹைதராபாத் போட்டியின் வெற்றி தோல்வியை பொறுத்து ராஜஸ்தானின் இடம் தீர்மானிக்கப்படும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி இறுதிச் சுற்றுக்கு இரண்டு வாய்ப்புகளை பெறும். அந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தால், இறுதிச் சுற்றுக்கு செல்ல 2 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

ராஜஸ்தான் - கொல்கத்தா இதுவரை நேருக்குநேர்: 

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 14 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று மழைக்கு வாய்ப்பா..? 

வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மழை போட்டியை கெடுக்கலாம். அதேபோல், பகலில் மழை பெய்ய 50% வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்: 

பர்சபரா ஸ்டேடியத்தின் எல்லை தோராயமாக 68 முதல் 70 மீட்டர் வரை மட்டுமே உள்ளது. இதன் காரணமாக, எல்லை சிறியது என்பதால், இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இரண்டாவது இன்னிங்ஸின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் மாறலாம். எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. 

ஐபிஎல் 2024 இன் லீக் கட்டத்தின் கடைசி ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது. அந்த போட்டியில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. இதன்மூலம், இது குறைந்த ஸ்கோரை பதிவு செய்த போட்டியாக அமைந்தது. இன்றைய நாளில் கவுகாத்தி ஆடுகளம் எப்படி விளையாடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த மைதானத்தில் 3 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த 2 அணிகளும், இரண்டாவதாக பேட்டிங் செய்த 1 அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த பிட்ச்சில் ஐபிஎல்லில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 180 ரன்கள்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget