மேலும் அறிய

RCB vs LSG: லக்னோவை இன்று எதிர்கொள்ளும் பெங்களூரு.. இரண்டாவது வெற்றி யாருக்கு..? அணி விவரம் இதோ!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 

இந்தியன் பிரீமியல் லீக் (ஐபிஎல்) 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் தற்போது ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 

பிட்ச் எப்படி..? 

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் ரன் மழையை பொழியலாம். இந்த மைதானத்தில் கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது. வேகப்பந்து வீச்ச்சாளர்கள் தொடக்கத்தில் அதிக ஸ்விங்களை செய்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கலாம். இன்றைய போட்டியில், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். 

பெங்களூரில் உள்ள இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 90 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள அணிகள் இலக்கை துரத்தவே அதிகம் விரும்புகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீசலாம். சின்னசாமி மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்கள்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானது. அதன்பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 4 போட்டிகலில் விளையாடியுள்ளது. இதில், அதிகபட்சமாக பெங்களூரு அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் லக்னோ ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  

இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இந்தநிலையில், சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி, லக்னோ அணியை வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். 

போட்டியின்போது மழைக்கு வாய்ப்பா..? 

பெங்களூருவில் மாலை நேரத்தில் வெப்பம் இருக்கும், போட்டியின் தொடக்கத்தில் வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பே இல்லை.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், மயங்க் டாகர், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், நவீன்-உல்-ஹக்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget