IPL 2024: அதற்குள் 1000 சிக்ஸர்கள்! எந்தெந்த சீசனில் எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?
கடந்த 2023ம் ஆண்டு 70வது போட்டியில் 1100 சிக்ஸர்கள் கடந்த நிலையில், ஐபிஎல் 2024ன் 57வது லீக் போட்டியிலேயே தற்போது 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்தே, பல பவுண்டரிகளையும், சிக்ஸர்களை பார்த்துவருகிறது. இந்த சிக்ஸர்களின் ஆதிக்கத்திற்கு ஐபிஎல் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ரோஹித் சர்மா, மகேந்திர சிங் தோனி மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோர் அதிகளவில் அடித்துள்ளனர்.
57வது போட்டியிலே 1000 சிக்ஸர்கள்:
2018ம் ஆண்டு 872 சிக்ஸர்கள்தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சீசனாக இருந்தது. இந்த சாதனை கடந்த ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2023ம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. இந்த இரண்டு ஐபிஎல் சீசனிலும் 1000 சிக்ஸர்கள் கடந்தது. கடந்த 2023ம் ஆண்டு 70வது போட்டியில் 1100 சிக்ஸர்கள் கடந்த நிலையில், ஐபிஎல் 2024ன் 57வது லீக் போட்டியிலேயே தற்போது 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்படும் என கணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்றைய லக்னோ - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது லக்னோ வீரர் குருணால் பாண்டியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உனத்கட் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டார். அது இந்த சீசனின் 1000வது சிக்ஸராக அமைந்தது.
ஐபிஎல் 2024ல் தற்போது 1000+ சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2022 ஐபிஎல் சீசனில் 1062 சிக்ஸர்களும், கடந்த 2023ம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் வரலாற்றில் சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது.
ஐபிஎல் பதிப்பில் 1000 சிக்ஸர்களை அடித்த மிகக் குறைந்த பந்துகள்:
நடப்பு வருடத்தையும் சேர்த்து கடந்த 3 ஆண்டுகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்க குறைந்த பந்துகளை இந்த சீசன் எடுத்துள்ளது. இதுவரை 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்களை ஐபிஎல் 2024ல் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2023 ஐபிஎல்லில் 15,390 பந்துகளும், கடந்த 2022 ஐபிஎல்லில் 16, 269 பந்துகளிலும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.
குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள்:
ஐபிஎல் 2024 - 13079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள்
ஐபிஎல் 2023 - 15390 பந்துகளில் 1000 சிக்ஸர்கள்
ஐபிஎல் 2022 - 16269 பந்துகளில் 1000 சிக்ஸர்கள்
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியல்:
ரோஹித் சர்மா- 276 சிக்ஸர்கள் (250 இன்னிங்ஸ்)
விராட் கோலி - 258 சிக்ஸர்கள் (240 இன்னிங்ஸ்)
எம்.எஸ்.தோனி - 248 சிக்ஸர்கள் (227 இன்னிங்ஸ்)
சஞ்சு சாம்சன் - 205 சிக்ஸர்கள் (159 இன்னிங்ஸ்)
சுரேஷ் ரெய்னா - 203 சிக்ஸர்கள் (200 இன்னிங்ஸ்)
ஒவ்வொரு சீசனிலும் அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் எண்ணிக்கை:
ஆண்டு | போட்டிகள் | மொத்த சிக்ஸர்கள் |
2008 | 59 | 622 |
2009 | 59 | 506 |
2010 | 60 | 585 |
2011 | 74 | 639 |
2012 | 76 | 731 |
2013 | 76 | 672 |
2014 | 60 | 714 |
2015 | 60 | 692 |
2016 | 60 | 638 |
2017 | 60 | 705 |
2018 | 60 | 872 |
2019 | 60 | 784 |
2020 | 60 | 734 |
2021 | 60 | 687 |
2022 | 74 | 1062 |
2023 | 74 | 1124 |
2024 | 57 | 1000 |
ஆண்டுவாரியாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
ஆண்டு | வீரர்கள் | விளையாடிய அணிகள் | சிக்ஸர்கள் |
2008 | சனத் ஜெயசூரியா | மும்பை இந்தியன்ஸ் | 31 |
2009 | ஆடம் கில்கிறிஸ்ட் | டெக்கான் சார்ஜர்ஸ் | 29 |
2010 | ராபின் உத்தப்பா | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 27 |
2011 | கிறிஸ் கெய்ல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 44 |
2012 | கிறிஸ் கெய்ல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 59 |
2013 | கிறிஸ் கெய்ல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 51 |
2014 | கிளென் மேக்ஸ்வெல் | பஞ்சாப் கிங்ஸ் | 36 |
2015 | கிறிஸ் கெய்ல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 38 |
2016 | விராட் கோலி | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 38 |
2017 | கிளென் மேக்ஸ்வெல் | பஞ்சாப் கிங்ஸ் | 26 |
2018 | ரிஷப் பண்ட் | டெல்லி கேப்பிடல்ஸ் | 37 |
2019 | ஆண்ட்ரே ரஸல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 52 |
2020 | இஷான் கிஷன் | மும்பை இந்தியன்ஸ் | 30 |
2021 | கே.எல்.ராகுல் | பஞ்சாப் கிங்ஸ் | 30 |
2022 | ஜோஸ் பட்லர் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 45 |
2023 | ஃபாஃப் டு பிளெசிஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 36 |
2024 | சுனில் நரைன் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 32 |