IPL 2024: வழக்கத்தைவிட கூட்டம் குறைவு! ஆரவாரம் இல்லாமல் நடக்கும் ராஜஸ்தான் - ஹைதராபாத் மோதல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் குவாலிபியர் 2 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ரசிகர்கள் கூட்டமின்றி காணப்படுகிறது.
ஐபிஎல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐபிஎல் சீசன் 17 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே24) நடைபெறும் குவாலிபயர் 2 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதும்.
வெறிச்சோடிய மைதானம்:
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஏழு போட்டிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஒவ்வொரு போட்டியின் போது சென்னை அணியின் ரசிர்களால் சேப்பாக்கம் மைதானமே திணறியது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக சென்னை அணியின் தல தோனியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தில் கூடினார்கள்.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் படைதான் தெரியும். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமலும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த சம்பவம் எல்லாம் நடந்தது. இப்படி இந்த சீசன் முழுவதும் சென்னை அணி விளையாடி போட்டிகளில் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த சேப்பாக்கம் மைதானம் இன்று ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணிகளாக இருப்பவை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தான்.
அதற்கு முக்கிய காரணம் இந்த மூன்று அணிகளிலும் இருக்கும் ஸ்டார் ப்ளேயர்ஸ் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹிட்மேன் ரோகித் சர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிங் கோலி ஆகியோர் இருக்கின்றனர். இதனால் அவர்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பெரும் அளவில் செல்வார்கள்.
ராஜஸ்தான் - ஹைதராபாத் மோதல்:
இந்நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஆனால் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே இறுதிப் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதி இருந்தால் ரசிகர்கள் கூட்டத்தல் சேப்பாக்கம் மைதானம் நிரம்பி இருக்கும் என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் புகைப்படம் பொருந்திய பேனர்கள் மைதானத்தில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: MS Dhoni New Team : சென்னை அணிக்கு எதிராக எம்.எஸ்.தோனியா? புதிய அணியை உருவாக்கும் திட்டமா? பதிவு சொல்வது என்ன?
மேலும் படிக்க: PV Sindhu: சீனாவின் ஹான் யூவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் - மாஸ்டர்ஸ் ஓபனில் கெத்து காட்டிய பி.வி.சிந்து!