IPL 2024 Opening Ceremony: தொடக்க விழா...ரிகர்சல் பார்த்த ஏ.ஆர்.ரகுமான்! வைரல் வீடியோ!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் தொடக்க விழாவிற்கு முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் ரிகர்சல் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
![IPL 2024 Opening Ceremony: தொடக்க விழா...ரிகர்சல் பார்த்த ஏ.ஆர்.ரகுமான்! வைரல் வீடியோ! IPL 2024 Opening Ceremony Rehearsal Chepauk Stadium - Watch IPL 2024 Opening Ceremony: தொடக்க விழா...ரிகர்சல் பார்த்த ஏ.ஆர்.ரகுமான்! வைரல் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/22/4d7da50fa79e337525de99f4d3b65e551711105176138572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல் சீசன் 17:
உலகக் கோப்பைக்கு பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டி இன்று (மார்ச் 22) நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண இருக்கின்றன.
முதல் போட்டி:
அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அந்த வகையில் முதல் போட்டிக்கு முன்னர் கோலாகலமாக தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், டைகர் ஷெராப் மற்றும் சோனு நிகாம் ஆகியோர் பங்குபெறும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனிடையே நேற்று சென்னை அணியின் கேப்டன் தோனி மாற்றப்பட்ட அந்த அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதன் முறையாக கேப்டனாக களம் இறங்க இருக்கிறார். அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
வைரல் வீடியோ:
Nee singam dhan song rehearsal at Chepauk get ready guy's 🦁🥳
— 🦋𝒥𝓊𝒿𝓊 ♡〽️SD🦁 (@jxjx7x_x) March 22, 2024
Goosebumps guaranteed during opening ceremony 😭😭😭😭😭😭💥 #MSDhoni pic.twitter.com/qdLMdopjbt
இந்நிலையில் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னர் ஏ. ஆர்.ரகுமான் மற்றும் சோமி நிகம் ஆகியோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரிகர்சல் பார்த்தனர். அப்போது, தோனியை குறிக்கும் வகையிலான “நீ சிங்கம் தான்” என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சோனு நிகாம் பாடினர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தல தோனியின் வீடியோக்களை வைத்து தமிழில் ஹிட்டான பாடல்களை வைத்து ரசிகர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரிகர்சல் பார்க்கும் இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறை! வீரர்களாக மட்டும் களம் காணும் 3 ஜாம்பவான்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)