மேலும் அறிய

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

IPL 2024 Hardik Pandya: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் மிகவும் மோசமான நிலைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சிதான் காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

ஐபிஎல் தொடர் என்றாலே அதில் முத்திரை பதித்த அணிகளில் டாப் லிஸ்ட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போதும் இடம் உள்ளது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதற்கு காரணமாக கூறப்படுவது மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவைத்தான் அனைவரும் காரணம் கூறுகின்றனர். பாண்டியா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதா என்பதை இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம். 

மும்பை இந்தியன்ஸ் அணியும்  ஹர்திக் பாண்டியாவும்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த அணியின் உரிமையாளராக முகேஷ் அம்பானி உள்ளார். இந்த அணி இதுவரை 6 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, அதில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முழுநேர கேப்டன்களாக இருந்தவர்கள் சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் ரோகித் சர்மா. இவர்களில் ரோகித் சர்மா மட்டுமே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதுவும் 5 கோப்பைகள். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரோகித் வசம் இருந்த கேப்டன்சி ஹர்திக் பாண்டியா வசம் கொடுக்கப்பட்டது. 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

ஹர்திக் பாண்டியாவை அவரது அடிப்படை விலைக்கு வாங்கி, அவரை சர்வதேச தரம் கொண்டு வீரராக உருவாக்கியதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பங்கு முக்கியமானது. 2015ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அதே தொடரில் விளையாடவும் வைத்தது. பொதுவாக மும்பை அணி ஒரு இளம் வீரரை குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடாத இந்திய வீரர்களை ஏலத்தில் எடுத்தால் அவர்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது நன்கு பயிற்சி கொடுத்து தயார் படுத்தும். அதன் பின்னரே அவரை களமிறக்கும். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் ஆசாத்திய திறமை மும்பை அணி நிர்வாகத்தையும் உயர்மட்ட குழுவையும் ஈர்த்ததால் அவரை ஏலத்தில் எடுத்த ஆண்டே களமிறக்கியது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ஹர்திக். 

ஹர்திக் பாண்டியாவின் சர்ச்சைக் கருத்து

2015ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா 2022ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு செல்வதாக விருப்பம் தெரிவித்து, மும்பை அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படியாக கேட்டுக்கொண்டார். ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த யோசனை வழங்கியது மட்டும் இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான 2022ஆம் ஆண்டே கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக விளங்கியவர் ஆஷிஷ் நெஹ்ரா. இதனை ஹர்திக் பாண்டியாவே பொதுவெளியில் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா கேப்டான பொறுப்பேற்ற முதல் ஆண்டில் குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததை மும்பை அணியின் ரசிகர்களும் கொண்டாடினர். குறிப்பாக மும்பை அணியின் வளர்ப்பு, கோப்பையை வென்றுள்ளது என்றெல்லாம் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் ஹர்திக்கை கொண்டாடியது. 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

ஆனால் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டியில், ” எனது வெற்றிக்கு இரண்டு வகை வழிகள் என் முன்னால் உள்ளது. ஒன்று மும்பை அணியைப் போல் உலகத்தின் தலைசிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்களை களமிறக்கி கோப்பையை வெல்வது. மற்றொன்று, அணிக்குள் நல்ல சூழலை உருவாக்கி, அதன் மூலம் வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரச் செய்து அதன் மூலம் கோப்பையை வெல்வது. இதில் நான் சென்னை அணியின் வழியை தேர்வு செய்துகொண்டேன்” எனக் கூறினார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பேச்சு மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியது. குறிப்பாக மும்பை அணியில் இருக்கும் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா

இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்குப் பின்னர் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா ட்ரேட் செய்யப்பட்டார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ட்ரேட் ஆக பார்க்கப்பட்டது. ஒரு அணியின் கேப்டனை அது இரண்டு ஆண்டுகள் ஒரு அணியை வழிநடத்திய கேப்டன், அதிலும் அறிமுக ஆண்டில் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன், அடுத்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், கடைசி பந்து வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றது என மிகவும் வெற்றிகரமான கேப்டனாகவே தன்னை நிலைநிறுத்தியிருந்தார் ஹர்திக். இப்படியான நிலையில் மும்பை அணி அவரை ட்ரேட் செய்த கொஞ்ச நாட்களில் மும்பை அணியின் கேப்டன் எனவும் அறிவித்தது. இது ஏற்கனவே கோபத்தில் இருந்த மும்பை அணியின் ரசிகர்களின் கோபத்தினை மேலும் தூண்டிவிட்டதுபோல் இருந்தது. மும்பை அணியின் சமூகவலைதளப் பக்கத்தினை பின் தொடர்வதை நிறுத்தி  தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோல் மும்பை அணியின் கொடியை எரித்தும், மும்பை அணியின் ஜெர்சியை எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணங்கள் குறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டி தொடர்பான வீடியோவுக்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, “ மார்க் பவுச்சர் பேசியதில் உண்மையே இல்லை” என கமெண்ட் செய்திருந்தார். ரித்திகாவின் இந்த பதிவு ரோகித் சர்மாவின் ரசிகர்களையும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையும் மேலும் கோபமாக்கியது.

சொதப்பல் கேப்டன்சி- சீனியர்களை புறக்கணித்த ஹர்திக் 

ரசிகர்களின் கோபத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஹர்திக் களத்தில் சிறப்பாக செயல்படுவதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படியான நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி குஜராத் அணிக்கு எதிராக அகமாதாபாத் மைதானத்தில் களமிறங்கியது. அங்கு கூடியிருந்த குஜராத் அணியின் ரசிகர்கள் மற்றும் மும்பை இந்தியன் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை அசிங்கப்படுத்தும் விதமாக கூச்சலிட்டனர். ஆடுகளத்திற்கு வெளியே ரசிகர்கள் இவ்வாறு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்த நேரத்தில் மும்பை அணியின் முதல் ஓவரை வீசினார் ஹர்திக் பாண்டியா. அணியில் உலகின் தலைசிறந்த மற்றும் எதிரணிக்கு சவால் அளிக்கும் பவுலரான பும்ரா இருக்கும்போது ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை வீசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பவர்ப்ளேவின் 4வது ஓவரைத்தான் பும்ரா வீசினார். அந்த ஓவரில் பும்ரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

இந்த ஆட்டம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பும்ராவை பவர்ப்ளேவில் புறக்கணித்துவந்தார் ஹர்திக். இது தொடர்ந்து மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. பலமான அணியான ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேவில் பும்ராவுக்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தார். அந்த ஆட்டத்தில் பவர்ப்ளேவில் ஹைதராபாத் அணி 81 ரன்கள் குவித்தது. இதுபோன்ற விஷயங்கள் மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஒருசில போட்டிகளுக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா ஓவர் வீசுவதை தவிர்த்துவந்தார். இதுபோன்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க, மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை களத்தில் மிகவும் மோசமாக நடத்திய வீடியோவும் இணையத்தில் பரவி ரோகித் சர்மா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

ரோகித் சர்மாவை மதிக்காத ஹர்திக் 

அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் விக்கெட்டினை கைப்பற்ற ரோகித் சர்மா அறிவுருத்தியதைப் போல் ஹர்திக் ஃபீல்டிங் செட் செய்யாதது, ரோகித் சர்மாவுக்கே கோபத்தை ஏற்படுதியது. தொடர்ந்து இரண்டு பந்துகளுக்கு சொன்ன ரோகித் மிகுந்த கோபத்திற்குள்ளாகி அமைதியாகிவிட்டார். மேலும் நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரர் என்றால் அது திலக் வர்மா. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா 32 பந்தில் 63 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருந்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு திலக் வர்மாவை கைகாட்டினார். ஆனால் மும்பை அணியின் தோல்விக்கு பல போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக இருந்துள்ளது.ஹர்திக் பாண்டியா நடப்புத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 11 முறை தனது விக்கெட்டினை இழந்து மொத்தம் 198 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 46 ரன்கள்தான். சுமாராகவே பந்து வீசி வரும் ஹர்திக் இதுவரை 27 ஓவர்கள் பந்து வீசி, 297 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். 

Hardik Pandya: மும்பையின் தொடர் சரிவு; தவறு நடந்தது எங்கு? பாண்டியா மீது பாயும் குற்றச்சாட்டுகள் - விரிவான அலசல்!

ஒரு அணியின் கேப்டனாக தோல்விக்கு நானே பொறுப்பேற்கின்றேன் எனக் கூறாமல் அல்லது எதிரணி எங்களைவிட சிறப்பாக செயல்பட்டனர் எனக் கூறாமல் அணியில் சிறப்பாக விளையாடி வரும் திலக் வர்மாவை கைகாட்டியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக திலக் வர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் மோதலே உண்டானது என தகவல்கள் கசிந்தது. 

ஹர்திக் செய்ய வேண்டியது என்ன?

இந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா கூறியதை நினைவு படுத்திக் கொள்வது சரியாக இருக்கும். அதாவது, மும்பை அணி தலைசிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்கள் மூலம் கோப்பையை வெல்கின்றது என்பது. மும்பை அணி 2023ஆம் ப்ளேஆஃப் சுற்றுவரை வந்திருந்தது. இதற்கும் கடந்த ஆண்டு மும்பை அணியில் பும்ரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு மும்பை அணி பலமான அணியாகவே காட்சி அளிக்கின்றது. ஆனால் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளது. சிறந்த வீரர்கள் அணியில் இருந்தால் ஒரு அணி வெற்றிபெறாது அணியை சரியாக வழிநடத்தினால் மட்டுமே வெற்றியை எட்டமுடியும் என்பதை ஹர்திக் பாண்டியாவுக்கு இப்போது புரிந்து இருக்கும். எனவே எதிரணியின் ஆட்டத்தை கவனித்து, தனது அணியில் உள்ள வீரர்களை முறையாக பயன்படுத்தி வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும். ஹர்திக் பாண்டியாவிற்கு கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் நீண்டகாலத்திற்கு உள்ளது. அதனை தன் தவறான முடிவுகளால் சீரழிக்காமல் சிறந்த வீரராக சிறந்த கேப்டனாக செயல்பட திட்டமிடவேண்டியது அவசியம்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget