IPL 2024 MI vs SRH: 7 ஓவர்கள்...102 ரன்கள்! மும்பை அணியின் பந்து வீச்சை பறக்கவிடும் சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 102 ரன்களை விளாசியுள்ளது.
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 27) நடைபெற்று வரும் 8 வது லீக் போட்டியில் மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அந்தவகையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 13 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார் அபிஷேக் சர்மா.
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி
HUNDRED FROM JUST 7 OVERS FOR SRH....!!! 🤯 pic.twitter.com/2vIZiIFmBS
— Johns. (@CricCrazyJohns) March 27, 2024
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். அந்த வகையில் மும்பை அணியின் பந்து வீச்சை சிக்ஸரும் பவுண்டரியும் என மாறி மாறி பறக்க விட்டனர். ஒரு கட்டத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.
7 ஓவர்களில் 100 ரன்களை கடந்த SRH:
இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 18 பந்துகளில் 57 ரன்களை விளாசினார்கள். அந்த வகையில் 7 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 102 ரன்களை கடந்தது.
Kavya Maran in the stands.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 27, 2024
SRH 102/1 in just 7 overs. pic.twitter.com/H8iMsBX8ZQ
இதனிடையே அதிரடி ஆட்டம் காட்டி வந்த டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 62 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்த சீசனில் அதிவேக அரைசதம் எடுத்த வீராராக இருந்த டிராவிஸ் ஹெட்டை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்தார். அந்தவகையில் 23 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசி 63 ரன்களை குவித்தார்.