மேலும் அறிய

LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

IPL 2024 LSG vs DC Match Highlights: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அதேபோல், டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளும் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளும் முகேஷ்  மற்றும் இஷாந்த் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். 

அதன் பின்னர் 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்கம் மட்டும் சிறப்பாக அமையவில்லை. அதிரடி ஆட்டக்காரர் வார்னர் 8 ரன்னில் தனது விக்கெடினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு மெக்கர்க் வந்தார். அவருடன் இணைந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா இணைந்து பவுண்டரிகளை விளாசி வந்தார். 

இந்த கூட்டணி பவர்ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தியதால் லக்னோ அணி என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தனர். குறிப்பாக தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய மெக்கர்க் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த ப்ரித்வி ஷா தனது விக்கெட்டினை 21 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 

அதன் பின்னர் கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். இவர் மெக்கர்க் உடன் இணைந்து சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் லக்னோ அணி வீசிய சவாலான பந்துகளை பொறுப்புடனே கையாண்டனர். இதனால் லக்னோ அணியால் மேற்கொண்டு விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. இந்த கூட்டணி அதிரடியாக ரன்கள் குவித்து வந்த போது போட்டியின் 12வது ஓவரை ஸ்டாய்னஸ் வீசினார். அந்த ஓவரில் மெக்கர்க் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பினை ரவி பிஷ்னாய் வீணடிக்க, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதிரடியாக விளையாடிய மெக்கர்க் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். மறுமுனையில் இருந்த ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

போட்டியின் 15வது ஓவரில் மெக்கர்க்கும் 16வது ஓவரில் ரிஷப் பண்ட்டும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறியது டெல்லி அணி ரசிகர்களுக்கு கவலையைக் கொடுத்தாலும், டெல்லி அணியின் வெற்றியினை பாதிக்கவில்லை. அதன் பின்னர் களத்தில் இருந்த ஸ்டப்ஸ் மற்றும் ஹோப் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.  இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
Embed widget