மேலும் அறிய

LSG vs DC LIVE Score: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

IPL 2024 LSG vs DC LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
LSG vs DC LIVE Score: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

Background

லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று கே.எல். ராகுல் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

லக்னோ - டெல்லி மோதல்:

உத்தரபிரதேச  மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. லக்னோ அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற லக்னோ முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், டெல்லி அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில்  மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் கே.எல். ராகுல், ஸ்டோய்னிஸ், பூரான் மற்றும் டி காக் ஆகியோர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் கவனம் ஈர்க்கிறார். அதேநேரம், காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவர் களம் கண்பாரா என்பது சந்தேகமே.  யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். டெல்லி அணியில் கேப்டன்ம் ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளன. ஆனால் டேவிட் வார்னர் போன்ற மற்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவிற்கு நம்பிக்கை தருகின்றனர். 

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணியே 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 195 ரன்களையும், குறைந்தபட்சமாக 193 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 189 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

மைதானம் எப்படி?

ஏக்னா கிரிக்கெட் மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதோடு, குறைந்தபட்ச ஸ்கோரிங் போட்டிகளுக்கு பிரபலமானதாகும். இன்றைய போட்டியிலும் அதே சூழல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

உத்தேச அணி விவரங்கள்:

லக்னோ: குயின்டன் டி காக், KL ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்

டெல்லி: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

23:16 PM (IST)  •  12 Apr 2024

LSG vs DC LIVE Score: சொந்த மண்ணில் வீழ்ந்த லக்னோ; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

22:51 PM (IST)  •  12 Apr 2024

LSG vs DC LIVE Score: மெக்கர்க் அவுட்!

சிறப்பாக விளையாடி வந்த மெக்கர்க் 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

22:45 PM (IST)  •  12 Apr 2024

LSG vs DC LIVE Score: ப்ரேஸர் - மெக்கர்க் அரைசதம்!

ஐபிஎல் தொடரின் தனது அறிமுகப் போட்டியில் 31 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார். 

22:42 PM (IST)  •  12 Apr 2024

LSG vs DC LIVE Score: ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மெக்கர்க்!

போட்டியின் 13வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை மெக்கர்க் சிக்ஸருக்கு விளாசி மிரட்டியுள்ளார். 

22:38 PM (IST)  •  12 Apr 2024

LSG vs DC LIVE Score: 100 ரன்களை எட்டிய டெல்லி!

12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.