KKR vs LSG: கொல்கத்தாவிற்கு எதிராக இதுவரை தோல்வியே இல்லை.. கெத்துக்காட்டும் லக்னோ.. இன்று வெற்றி யார் வசம்..?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதும் போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024ன் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது கடைசி போட்டிய்ல் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கும். இந்த சீசனில் இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன.
ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்காவது இடத்தில் இருக்கிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவர். சமீபத்திய போட்டிகளில் அடிப்படையில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். போட்டியின் தொடக்கத்தில் முதல் சில ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. அதிலும், ரன் மழை பொழிந்தது. இந்த போட்டியில் இரூ அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்தது. எனவே, இன்றைய போட்டியிலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மூன்று போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக லக்னோ அணியே உள்ளது. இதுவரை அனைத்து போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று முயற்சிக்கும்.
விளையாடிய மொத்த போட்டிகள்: 3
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 3 வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 0
முடிவு இல்லை: 0
கைவிடப்பட்டது: 0
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
இரு அணிகளின் முழு விவரம்:
கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரைன், அக்ரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ராமன்தீப் சிங், கே.எஸ்.பரத், துஷ்மந்த சமீரா, ஹர்ஷினஃபர், ஏ.எம். மணீஷ் பாண்டே, ரெஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா, ஷர்பான் ரூதர்ஃபோர்ட், சேத்தன் சகாரியா, சாகிப் ஹுசைன், சுய்யாஷ் சர்மா.
லக்னோ: குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், ஷமர் ஜோசப், அர்ஷத் கான், கிருஷ்ணப்ப கவுதம், கிருஷ்ணப்ப கவுதம் ஹென்றி , தீபக் ஹூடா, அர்ஷின் குல்கர்னி, பிரேராக் மன்கட், கைல் மேயர்ஸ், அமித் மிஸ்ரா, மொஹ்சின் கான், மணிராமன் சித்தார்த், ஆஷ்டன் டர்னர், யுத்வீர் சிங்.