IPL 2024 KKR vs PBKS: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கொல்கத்தா? டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச முடிவு
IPL 2024 KKR vs PBKS: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 21 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

17வது ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஏழு லீக் போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பத்து புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, ஆறு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் தான் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து வெல்லும் வாய்ப்பினை தவறவிட்டது. இதனால் பஞ்சாப் அணி வீரர்கள் பெரும் நம்பிக்கையோடு இந்த போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் விளையாடும் அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடி எதிரணியின் பலமான பவுலர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையில் பஞ்சாப் ரசிகர்கள் உள்ளனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. கொல்கத்தா அணி தனது கடைசி போட்டியில் பலமான பேட்டிங் வரிசை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. அதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் கொல்கத்தா அணி தொடர்ந்து நான்காவது முறையாக தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 21 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமந்தீப் சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்(கேப்டன்), ரிலீ ரோசோவ், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

