KKR vs DC: கொல்கத்தாவை வீழ்த்த வியூகம் அமைத்துள்ளதா ரிஷப் படை..? என்ன செய்யும் ஷ்ரேயாஸ் படை..? இன்று மோதல்..!
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 47வது போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சீசனில் இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக விசாகப்பட்டினத்தில் மோதியபோது கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
பிட்ச் ரிப்போர்ட்:
கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் இதுமாதிரியான ஸ்கோர் போர்டை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை துரத்தி வெற்றிபெற்றது.
மேலும், இந்த ஸ்டேடியத்தின் பிட்ச் பிளாடாக இருக்கும் நிலையில், வேக பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் மூலம் விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு அதிகம். இரண்டாவது இன்னிங்ஸின்போது சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது சுழல் மூலம் விக்கெட்களை வீழ்த்தலாம்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மொத்தம் 91 போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 54 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 176 ரன்கள் ஆகும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 முறையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 முறையும் பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டியில் முடிவு இல்லை.
கொல்கத்தா vs டெல்லி ஹெட் டு ஹெட் (கடந்த 5 போட்டிகள்)
- 2024 - கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2023 - டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2022 - டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2022 - டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2021 - கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இரு அணிகளின் முழு விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), கே.எஸ்.பாரத், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரசல், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், அனுகுல் ராய், ராமன்தீப் சிங், வருண் சக்ரர்போர்த்தி, வருண் சக்ரபர்தி. , வைபவ் அரோரா, சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, சுய்யாஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, சாகி ஹுசைன்.
டெல்லி கேபிடல்ஸ் அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், அபிஷேக் போரல், ரிக்கி புய், யாஷ் துல், ஷாய் ஹோப், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குமார் குஷாக்ரா, ஸ்வஸ்திக் சிகாரா, இஷாந்த் சர்மா, ஜே ரிச்சர்ட்சன், ரசிக் தார் சலாம், விக்கி ஆஸ்ட்வால். , என்ரிச் நோர்கியா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, கலீல் அகமது, சுமித் குமார், அக்ஷர் படேல், குல்பாடின் நைப், லலித் யாதவ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.