மேலும் அறிய

RCB vs RR LIVE Score: குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB தோல்வி!

IPL 2024 Eliminator RCB vs RR LIVE Score Updates: பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் சுற்று குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
RCB vs RR LIVE Score: குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB தோல்வி!

Background

நடப்பு ஐபிஎல் 2024 சீசனானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது. இந்த போட்டிய்ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை குவாலிஃபையர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கும். தோற்கும் அணி நடப்பு ஐபிஎல்லில் இருந்து வெளியேறும். 

இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியம் இரு அணிக்கும் சொந்த ஸ்டேடியம் இல்லை. நடுநிலையான ஸ்டேடியமாக உள்ளது. 

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லாமல் போயுள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்: 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு அதிக ஸ்கோர்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்றைய ஆர்சிபி - ஆர்ஆர் இடையிலான எலிமினேட்டர் சுற்றில் 180க்கும் அதிகமான ரன்கள் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 231 ரன்கள் குவித்துள்ளனர். இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 173 ரன்கள் ஆகும். மேலும், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை வீழ்த்தவும் வாய்ப்புள்ளது. 

டாஸ் வெல்லும் அணி என்ன தேர்வு செய்ய வேண்டும் முதலில்..? 

ஐபிஎல் 2024ன் மொத்தம் 6 போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றுள்ளது. இதில், 6 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், முதல் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், யாஷ் தயாள், கர்ண் சர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
இம்பாக்ட் பிளேயர் - ஸ்வப்னில் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
இம்பாக்ட் பிளேயர் - டி. ஃபெரீரா.

புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எந்த இடத்தில்..? 

ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4வது இடத்திலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்தில் இருக்கிறது. எனவே, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்று பார்ப்போம்.

23:37 PM (IST)  •  22 May 2024

RCB vs RR LIVE Score: குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB தோல்வி!

ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி சென்னையில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பெற்றதால் நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

23:20 PM (IST)  •  22 May 2024

RCB vs RR LIVE Score: ஹெட்மயர் அவுட்!

ஹெட்மயர் தனது விக்கெட்டினை 18வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார். 

23:15 PM (IST)  •  22 May 2024

RCB vs RR LIVE Score: ரியான் ப்ராக் க்ளீன் போல்ட்!

ஆட்டத்தின் 18வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரியான் ப்ராக் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரது விக்கெட்டினை முகமது சிராஜ் கைப்பற்றினார். 

23:01 PM (IST)  •  22 May 2024

RCB vs RR LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்படுகின்றது. 

22:47 PM (IST)  •  22 May 2024

RCB vs RR LIVE Score: துருவ் ஜுரேல் ரன் அவுட்!

மிகவும் நெருக்கடியான நிலையில் துருவ் ஜுரேல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரை விராட் கோலி மற்றும் கேமரூன் க்ரீன் ரன் அவுட் செய்தனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
Embed widget