மேலும் அறிய

DC vs KKR LIVE Score: 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லியை சிதைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்ற கொல்கத்தா!

IPL 2024 DC vs KKR LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
DC vs KKR LIVE Score: 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லியை சிதைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்ற கொல்கத்தா!

Background

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்ற கொல்கத்தா அணி, அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடும் பிளேயிங் 11, பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் இங்கு தெரிந்துகொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்: 

விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிப்பர். இந்த ஆடுகளத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை கடினமான பிட்சாக இருக்கும். எனவே இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் இந்த கடினமான சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சவாலாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட களமிறங்கிய போது அந்த அணி ஆட்டமிழந்தது, ஆனால் இதன் பின்னரும் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எட்டியது. அதாவது போட்டியில் மொத்தம் 362 ரன்கள் எடுக்கப்பட்டது. இன்றைய போட்டியிலும் இதே போன்ற ஒன்றைக் காணலாம். 

இந்த மைதானத்தில் இதுவரை 14 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த அந்த அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

நேருக்கு நேர்: 

டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 16 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. 

விளையாடிய போட்டிகள்: 33
DC வென்றது: 16
KKR வென்றது: 16
டை: 00
முடிவு இல்லை: 0
கைவிடப்பட்டது: 1

கொல்கத்தாவின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில், டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அபிஷேக் போரல், பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா மற்றும் கலீல் அகமது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா மற்றும் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி.

23:29 PM (IST)  •  03 Apr 2024

DC vs KKR LIVE Score: 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! டெல்லியை சிதைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்ற கொல்கத்தா!

இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டும் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றுள்ளது. 

23:05 PM (IST)  •  03 Apr 2024

DC vs KKR LIVE Score: ஸ்டப்ஸ் அவுட்!

ஸ்டப்ஸ் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் போட்டியின் 24வது ஓவரில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

23:02 PM (IST)  •  03 Apr 2024

DC vs KKR LIVE Score: ஸ்டப்ஸ் அரைசதம்!

28 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி விளாசி தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் விளாசும் முதல் ஐபிஎல் அரைசதம் இது. 

23:01 PM (IST)  •  03 Apr 2024

DC vs KKR LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

22:55 PM (IST)  •  03 Apr 2024

DC vs KKR LIVE Score: அக்‌ஷர் பட்டேல் அவுட்!

அக்‌ஷர் பட்டேல் தான் எதிர்கொண்ட முதல் பந்தினை சிக்ஸர் விளாச முயற்சி செய்து விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget