CSK vs SRH LIVE Score: சென்னையை வீழ்த்திய ஹைதராபாத்; புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்!
IPL 2024 CSK vs SRH LIVE Score Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Background
உலகம் முழுவதும் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக மக்களால் பார்க்கப்படும் லீக் போட்டி அதிக பணம் புழங்கும் லீக் போட்டி என்றால் அது ஐபிஎல் மட்டும் தான். கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது.
இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வியும் இரண்டு வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி தோல்வியைச் சந்தித்திருந்தது. அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளும் சென்னை அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் விளையாடியது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியை விசாகப்பட்டினத்தில் விளையாடியது. இந்நிலையில் சென்னை அணி இன்று ஹைதராபாத் அணிக்கு சொந்தமான மைதானமான ராஜீவ்காந்தி மைதானத்தில் விளையாடவுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் மூன்று லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்விகளைச் சந்தித்து, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 19 முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியில் சென்னை அணியே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானமாக இருக்கும். நடப்பு சீசனில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 277 ரன்களையும், இரண்டாவதாக பேட் செய்த மும்பை அணி 246 ரன்களையும் குவித்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த களத்தில் இன்றைக்கு ஒரு விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CSK vs SRH Match Highlights: மிரட்டிவிட்ட ஹைதராபாத்; சென்னையை வீழ்த்திய கம்மின்ஸ் பட்டறை!
கடைசி மூன்று ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs SRH LIVE Score: கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட சென்னையின் தோல்வி; வெற்றியை நோக்கி வீறுநடை போடும் ஹைதராபாத்!
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.



















