மேலும் அறிய

IPL 2024: சுத்த பொய்.. எங்களுக்கு அந்த ஐடியாவே கிடையாது; வதந்திகளுக்கு கொந்தளித்த சி.எஸ்.கே சி.இ.ஓ

Chennai Super Kings: மும்பை அணி வீரர்களை சென்னை அணி ட்ரேட் செய்வதாக எழுந்த கிசுகிசுக்கள் குறித்து சென்னை அணி சி.இ.ஓ., பதில் அளித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு தொடனிய இந்த ஏலம் இரவு 9.30 மணி வரைக்கும் நடைபெற்றது. இதில் மொத்தம் 333 வீரர்கள் ஏலம் கூறப்பட்டார்கள். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர் என்றால் அது, ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியது. இவரை அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூபாய் 20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். 

இந்த ஏலத்திற்கு முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்கள் ட்ரேட் செய்யப்பட்டனர். அதில் மிகவும் முக்கியமான ட்ரேடாக பார்க்கப்பட்டது, மும்பை இந்தியன்ஸ் அணி செய்ததுதான். மும்பை அணி தன்னிடம் இருந்த ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை பெங்களூரு அணிக்கு விற்றுவிட்டு, அந்த தொகையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியது. இது ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது. இது மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவு மும்பை அணியின் சமூகவலைதளப் பக்கங்களை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பின் தொடர்வதை ரத்து செய்தனர். இதனால் மும்பை அணியின் ஃபளோவர்ஸ் எண்ணிக்கை குறைந்தது.

IPL 2024: சுத்த பொய்.. எங்களுக்கு அந்த ஐடியாவே கிடையாது; வதந்திகளுக்கு கொந்தளித்த சி.எஸ்.கே சி.இ.ஓ

மும்பை அணியின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சென்னை அணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் மும்பை அணியின் நடவடிக்கையால் அதிருப்தியில் உள்ள வீரர்களை சென்னை அணி நிர்வாகம் தங்களது அணிக்காக விளையாட அழைப்பு விடுத்துள்ளதாகவும் பேச்சுகள் அடிப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின்னர் இவர்களை சென்னை அணி ட்ரேட் செய்யவுள்ளதாகவும் ரசிகர்கள் தரப்பில் கிசுசிசுக்கள் கிளம்பியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது, ஒரு வீரரை ட்ரேட் செய்வது என்பது சென்னை அணியின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே அதனை நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம். அதேநேரத்தில் சென்னை அணியின் சார்பிலும் நாங்கள் மும்பை அணி வீரர்களை சென்னை அணிக்காக விளையாட விருப்பம் இருக்கின்றதா எனக் கேட்கவில்லை.  மேலும் மும்பை அணியுடன் வர்த்தகம் செய்ய  எங்களிடமும் வீரர்கள் இல்லை. மேலும் மும்பை அணி வீரர்களை ட்ரேட் செய்யவும் நாங்கள் விரும்பவில்லை” என துபாயில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு மத்தியில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget