IPL 2024: சென்னையை இன்று சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளும் குஜராத்! பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் XI விவரம் இதோ!
சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும், குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தியது.
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் ஏழாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை - குஜராத் மோதல்:
ஐ.பி.எல். 2024ல் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்று களமிறங்குகின்றன. கடந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்ரஸ் பெங்களூறை தோற்கடித்து வெற்றியை தொடங்கியுள்ளது.
அதேபோல், குஜராத் தனது தொடக்க ஆட்டத்தில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த சீசனின் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி கடைசி பந்தில் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றது.
சேப்பாக்கம் பிட்ச் எப்படி?
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தின் ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். புதிய பந்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிடும். அதேநேரத்தில், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் எடுக்க எதிரணி வீரர்கள் திணறுவார்கள்.
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இதுவரை 77 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. அதில், 46 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 31 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 163 ரன்கள் ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 150 ரன்கள் ஆகவும் உள்ளது.
இரு அணிகளின் முழு விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஹானே,, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அவ்னிஷ் ராவ் ஆரவலி.
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, சாய் சுதர்ஷன், ஷாருக் கான், பி.ஆர்.ஷரத், மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், அபினவ் மனோகர், ரஷித் கான், விஜய் சங்கர், மனவ் சுதார், ராகுல் தெவாடியா, ஸ்பென்சர் ஜான்சோனியா ., கார்த்திக் தியாகி, ஜோஷ்வா லிட்டில், தர்ஷன் நல்கண்டே, நூர் அகமது, சாய் கிஷோர், மோஹித் சர்மா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், சுஷாந்த் மிஸ்ரா.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் திக்ஷானா, முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா உமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன்.