Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்.. அதிக ரன்களை குவித்த CSK வீரர்கள்! முதலிடம் யாருக்கு?
Chepauk Stadium Leading Run Scorer: சி.எஸ்.கே அணியின் ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிக ரன்கள் குவித்த சி.எஸ்.கே. வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
![Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்.. அதிக ரன்களை குவித்த CSK வீரர்கள்! முதலிடம் யாருக்கு? IPL 2024 All Time Leading IPL Run Scorers at MA Chidambaram Chepauk Stadium Suresh Raina MS Dhoni Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்.. அதிக ரன்களை குவித்த CSK வீரர்கள்! முதலிடம் யாருக்கு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/06/f9fa8d7f18f57af6a70785ba9646acd31709730897310572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிக ரன்கள் குவித்த சி.எஸ்.கே. வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்:
அதிக ரன்கள் குவித்த சி.எஸ்.கே வீரர்கள்:
இந்த பட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் குட்டி தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் 1506 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் 1445 ரன்களை குவித்து உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் |
மொத்த ரன்கள் |
சுரேஸ் ரெய்னா | 1506 |
எம்.எஸ்.தோனி | 1445 |
ஹைஸ்ஸி | 848 |
ஃபாஃப் டு பிளெசிஸ் |
553 |
எஸ்.பத்ரினாத் |
438 |
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)