![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2024 Points Table: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை - ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? விவரம் உள்ளே..!
IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
![IPL 2024 Points Table: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை - ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? விவரம் உள்ளே..! IPL 2024 after chennaui vs kolkata match rajasthan leads in points table IPL 2024 Points Table: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை - ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? விவரம் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/08/977ea592bd4d4c256e5b62a6fc2c1f241712599992827987_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IPL 2024 Points Table: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை அணி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை 22 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் அந்த அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது கீழே அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளது..
எண் | அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
1 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 4 | 4 | 0 | 8 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 4 | 3 | 1 | 6 | |
3 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 4 | 3 | 1 | 6 |
4 | சென்ன சூப்பர் கிங்ஸ் | 5 | 3 | 2 | 6 |
5 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 4 | 2 | 2 | 4 |
6 | பஞ்சாப் கிங்ஸ் | 4 | 2 | 2 | 4 |
7 | குஜராத் டைட்டன்ஸ் | 5 | 2 | 3 | 4 |
8 | மும்ப இந்தியன்ஸ் | 4 | 1 | 3 | 2 |
9 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 5 | 1 | 4 | 2 |
10 | டெல்லி கேபிடல்ஸ் | 5 | 1 | 4 | 2 |
இன்றைய போட்டி:
இன்று நடைபெறும் தொடரின் 23வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், நான்காவது இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 5வது இடம் வரை முன்னேறக்கூடும். நடப்பு தொடரில் இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பிளே-ஆஃப் சுற்று:
தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிகள் சமநிலையை அடைந்தால் ரந்ரேட் அடிப்படையில் அணிகள் பட்டியலிடப்படும். இதன் காரணமாக மிக மோசமான தோல்விகளை தவிர்க்கவும், பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் ஒவ்வொரு அணியும் ஆர்வம் காட்டுகிறது. அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டரில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும். அந்த அணியும், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)