Kohli - Gill: விராட் கோலி - சுப்மன் கில்..! இப்படியொரு திகைக்க வைக்கும் ஒற்றுமையா?
கில் அறிமுகமான நேரத்தில் கோலியோடு ஒப்பிடப்பட்டு அடுத்த கோலி என்று பேசப்பட்டவர்தான் இவர். அதற்கேற்றாற்போல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கில்.
சுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு இடையிலான இந்த ஐபிஎல் தொடரில் உருவாகியுள்ள ஒற்றுமை பலரை திகைக்க வைத்துள்ளது.
ஐபிஎல் 2023
ஐபிஎல் 2023 சீசன் பாதிகட்டத்தை தாண்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த முறை கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இம்முறையும் ஆதிக்கம் செலுத்துகிறது. டாப் 4 இல் ராஜஸ்தான், லக்னோ, சென்னை அணிகள் உள்ளன. ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா அணிகள் சொதப்பி வரும் நிலையில், பிளே ஆஃப் அணிகள் விரைவில் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது. இம்முறை ஆர்சிபி அணி நன்றாகவே ஆடி வந்தாலும், ஹோம் மேட்ச்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
Tf my prediction of gill going the kohli way is becoming true.. https://t.co/xXkJo9nmgK
— Ishan rath (@Ishan_rath_7) April 29, 2023
ஆர்சிபி அணி
அதுபோக பேட்டிங்கில் டு பிளஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல்லை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற நிலை இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் அவர்கள் மூவருமே ஆரஞ்சு கேப் லிஸ்டில் இருக்கும் அளவுக்கு நன்றாக பெர்பார்ம் செய்தாலும் இறுதி ஓவர்களில் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க ஆள் இல்லாமல் தினருகிறது. பல சுவாரஸ்யமான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சுவாரஸ்யமான புள்ளி விவரம் ஒன்று ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விராட் - கில்
விராட் கோலி, சுப்மன் கில் ஆகிய இருவருமே இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட விராட் கோலி போன்ற கிளாசிக் வீரர்தான் கில். கில் அறிமுகமான நேரத்தில் கோலியோடு ஒப்பிடப்பட்டு அடுத்த கோலி என்று பேசப்பட்டவர்தான் இவர். அதற்கேற்றாற்போல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கில். ஆனால் இந்த ஐபிஎல் 2023 இல் இப்படி ஒரு ஒற்றுமை உருவாகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
So Gill will replicate Kohli Score Tommorow next 😂😂
— Pratheep (@208of149) April 30, 2023
ஆச்சர்யமளிக்கும் ஒற்றுமை
இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள இருவரும் சரியாக குவித்திருக்கும் ரன் எண்ணிக்கை 333. அதுமட்டுமல்ல, இருவருமே இந்த ரன்களை குவிப்பதற்கு எதிர்கொண்ட பந்துகளின் மொத்த எண்ணிக்கை 234. இது இரண்டும் ஒன்றாக இருந்தாலே உள்ளபடியே, ஒரே ஸ்ட்ரைக் ரேட், 142.30. இதுவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா, ஆனால் இன்னும் இருக்கிறது.இருவருமே இந்த ஐபிஎல்-இல் ஒருமுறை டக் அவுட் ஆகியிருக்கிறார்கள். அதோடு முடியவில்லை இருவருமே இந்த தொடரில் ஒரே ஒரு முறை நாட்-அவுட் ஆக இருந்திருக்கிறார்கள். இந்த எதிர்பாரா விதமான நம்பமுடியாத ஒற்றுமை பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர் கோலி வழியில் கில் செல்கிறார் என்பதை இன்னுமொருமுறை இது நிரூபித்துள்ளது என்கின்றனர்.