CSK vs RR Match Highlights: களத்தில் தோனி இருந்தும் கைவிட்டுப் போன போட்டி; ராஜஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
IPL 2023, CSK vs RR: ராஜஸ்தான் அணி சென்னை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிஙஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்.
அதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் அணி தனது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரியை விளாசியது. பவர்ப்ளேயின் இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் தொடக்க வீரர் பட்லருடன் இணைந்த படிக்கல் அதிரடி காட்டினார். பவர்ப்ளேவில் பெரும்பாலும் அவரே பந்துகளை எதிர் கொண்டார். அதனால், பவுண்டரிகளை விளாசி வந்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு ரன் மளமளவென அதிகரித்தது. பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் சேர்த்து இருந்தது. அதன் பின்னர் ராஜஸ்தான் அணி சென்னை அணியின் சுழலில் விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க தடுமாறியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் பட்லர் 52 ரன்கள், படிக்கல் 38 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ஹிட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா, தேஷ் பாண்டே மற்றும் ஆகாஷ் சிங் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணியைப் போல், சிறப்பாக அமைந்தது. ஆனால் பவர்ப்ளேவிற்குப் பிறகு ஆட்டம் முழுக்க முழுக்க சென்னை வசம் சென்றது. ஆனால் அதன் பின்னர் போட்டி முழுக்க முழுக்க ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஆடம் ஜாம்பா, அஸ்வின், சஹால் ஆகியோர் வசம் சென்றது. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்து இருந்த சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து இருந்தது. இதில் 50 ரன்கள் கான்வே எடுத்து இருந்தார். ஆனால் அவர் தனது விக்கெட்டை 15 ஓவரின் இறுதிப் பந்தில் இழந்தார்.
அதன் பின்னர் களத்தில் ஜடேஜா மற்றும் தோனி இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் சென்னை அணிக்கு 59 ரன்கள் தேவை என இருந்தது. மிகவும் பரபரப்பக சென்ற இந்த போட்டியில் இறுதி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. களத்தில் தோனி இருந்தார். சந்தீப் சர்மா பந்தை வீசினார். ஆனால் அந்த ஓவரில் 17 ரன்கள் தான் சென்னை அணி எடுத்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 172 ரன்களை மட்டுமே எட்டியது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.