IPL 2023 Qualifier 1: ஐபிஎல் தொடரில் முதல்முறையாக குஜராத்தை வீழ்த்துமா சென்னை?.. நேருக்கு நேர் விவரங்கள்
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளே-ஆஃப் சுற்று:
விறுவிறுப்பு, பரபரப்பு, கடைசி பந்து த்ரில்லர் என எதற்கும் பஞ்சமின்றி, இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது நடப்பாண்டு ஐபிஎல் தொடர். கடைசி லீக் போட்டி வரையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணிகள் எவை என்பது தொடர்பான கேள்வி நீடித்தது. இறுதியில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஐபிஎல் குவாலிபையர் -1:
அதைதொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இரவு 07.30 ம்ணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
சென்னையின் மோசமான வரலாறு:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆனால், அந்த 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடப்பாண்டில் இரு அணிகளும் விளையாடிய லீக் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால், இன்றைய போட்டியில் வென்று அதற்கு பழிவாங்க சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது. அதோடு, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். தோல்வியுற்றால் மீண்டும் குவாலிபையர் 2 போட்டியில் விளையாட வேண்டி இருக்கும்.
ஸ்கோர் விவரங்கள்:
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 178
சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 182
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 133
சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 137
தனிநபர் சாதனை:
குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த சென்னை வீரர் - ருதுராஜ் கெய்க்வாட், 218 ரன்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த குஜராத் வீரர் - டேவிட் மில்லர், 109 ரன்கள்
குஜராத் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை வீரர் - ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், 3 விக்கெட்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த குஜராத் வீரர் - அல்ஜாரி ஜோசப், 5 விக்கெட்கள்
குஜராத் அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த சென்னை வீரர் - துபே, 3 கேட்ச்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த குஜராத் வீரர் - சாஹா, 4 கேட்ச்கள்